சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரியின் பெயரிலோ அல்லது அவரது மனைவியின் பெயரிலோ சொந்த வீடு இருந்தால், அரசு குடியிருப்பை உடனே காலி செய்ய வேண்டும். இல்லையெனில், அபராதம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற டி.ஜி.பி., ஜெயினின் உத்தரவு காற்றில் பறக்கிறது.
போலீஸ் அதிகாரிகள் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை! சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் இருந்து சில நூறு அடி தொலைவில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தங்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வீடுகள் உள்ளன. அதில், ஐ.ஜி., கூடுதல் டி.ஜி.பி., மற்றும் டி.ஜி.பி., தங்கியுள்ளனர். இது தவிர, கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு 24 வீடுகள் உள்ளன. இதில், எஸ்.பி.,கள் மற்றும் டி.ஐ.ஜி.,கள் தங்கியுள்ளனர். அதே பகுதியில் புதிதாக 12 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளில் தங்கியுள்ள போலீஸ் அதிகாரிகள் பலர், பல ஆண்டுகளுக்கு முன்பே, வெளியூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெளியூரில் அந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பங்களா டைப்பில் அரசு குடியிருப்பு உள்ளது.