நாமக்கல், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் "தொடுவானம்" எனும் பெயரில் இணைய பயிலரங்கு நடைபெற்றது. இந்த பயிலரங்கில் கிராம தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம தன்னார்வலர்களுக்கான இணைய பயிலரங்கு நடைபெற்றது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சகாயம் பயிலரங்கினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.பயிலரங்கில் தகவல் தொடர்பில் வலைப்பூ எனும் தலைப்பில் காசி ஆறுமுகம் அவர்களும், எளிய பயிற்சியும் தகவல் தொடர்பும் எனும் தலைப்பில் கோபாலகிருஷ்ணனும்( ஹாய்கோபி), பயனரின் பார்வையில் வலைப்பூ எனும் தலைப்பில் சஞ்சய்காந்தியும், ஒரு அதிகாரியின் பார்வையில் வலைப்பூ எனும் தலைப்பில் நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் (லதானந்த்) அவர்களும், மின்னியல் நிர்வாகம் குறித்து மாவட்ட தகவலியல்(NIC) துறை அதிகாரி செல்வகுமார் , தகவல் அறியும் உரிமைச் சட்டமும் பயன்பாடும் எனும் தலைப்பில் வழக்கறிஞர் மார்டின் அவர்களும் விளக்கவுரையாற்றினர். இதனை அடுத்து காணொளியூடாகா பிரான்சிலிருந்து பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூரிலிருந்து மணியம், லண்டனிலிருந்து பேராசிரியர் சிவாபிள்ளை, மலேசியாவிலிருந்து இளந்தமிழ், ஆஸ்திரேலியாவிலிருந்து முகுந்தராசு,அமெரிக்காவிலிருந்து ஆல்பர்ட் பெர்ணான்டோ ஆகியோர் வாழ்த்து செய்தி வழங்கினர்.
மேலும் தொடர....
Sunday, December 20, 2009
Saturday, December 12, 2009
Sunday, December 6, 2009
போனது பெயிண்டர் வேலைக்கு, செய்வது புல் வெட்டும் வேலை மலேசியாவில் மதுரை இளைஞரின் அவலம்
மலேசியாவில் இறங்கியதுமே அவர்களது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டு இருக்கும். இது போதாது என்று பலர் சுற்றுலா பயணிகளுக்கான விசாவில் ஏஜென்டுகளால் அனுப்பப்பட்டிருப்பார்கள். மீறி நியாயம் கேட்டால் அடி, உதை சித்ரவதைதான்.
மேலும் படிக்க..
மேலும் படிக்க..
ஆங்கிலத்தை வாசி, தமிழை சுவாசி - மாணவர்களுக்கு நாமக்கல் கலெக்டர் சகாயம் அறிவுரை
ஏழைகளின் கடைசி நம்பிக்கை அரசு பள்ளிக்கூடங்களே,தாழ்வு மனப்பான்மையில் ஊறிப்போன சமூகத்தின் குழந்தைகள் நீங்கள் அதீதமான தன்னம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும்.நீங்கள் மேலும் மேலும் படித்து வளரும் போது ஆங்கிலத்தில் கற்பது தவறல்ல, ஆங்கிலத்தை வாசி, ப்ரெஞ்சை வாசி, ஹிந்தியை வாசி ஆனால் தமிழை சுவாசி. உங்களது இலக்கு தெளிவாக இருக்க வேண்டும் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் வரவேண்டும் என்ற உங்களது இலக்கு தெளிவாக இருக்க வேண்டும்.
மேலும் வாசிக்க..
மேலும் வாசிக்க..
Wednesday, December 2, 2009
நதிகள் இணைப்பு திட்டம் கைவிடப்பட்டது - மத்திய அரசு
இமயமலைப் பகுதியில் ஓடும் நதிகளை உள்நாட்டில் ஓடும் நதிகளுடன் இணைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய நீர் வளத்துறை மந்திரி பவன் குமார் பன்சால் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். ``ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் கோடி செலவிலான இந்த திட்டத்தை செயல்படுத்துவது இயலாத காரியம். ஆகவே இந்த திட்டம் கைவிடப்படுகிறது. ஆனால் இமயமலைப் பகுதியில் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டத்தையும், உள் நாட்டில் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டத்தையும் தனித்தனியாக நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலிக்கும்'' என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க...
மேலும் படிக்க...
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 4 ஆண்டு பி.எட் படிப்பு அறிமுகம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் +2 படித்த மாணவர்களுக்கு 4 ஆண்டுகள் பி.எட் படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக துணைவேந்தர் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 7 அரசு பி.எட் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் பி.எட் கல் லூரிகள் உட்பட 644 பி.எட் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த கல்லூரிகளில் பி.எட் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக, கற்பித்தல் முறையில் அதிக கவனம் செலுத்தப்படும்.
மேலும் படிக்க...
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 7 அரசு பி.எட் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் பி.எட் கல் லூரிகள் உட்பட 644 பி.எட் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த கல்லூரிகளில் பி.எட் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக, கற்பித்தல் முறையில் அதிக கவனம் செலுத்தப்படும்.
மேலும் படிக்க...
சர்வதேச ஊனமுற்றோர் தினம்
உலகளாவிய ரீதியில் சர்வதேச ஊனமுற்றோர் தினம் ஒவ்வொரு ஆண்டிலும் டிசம்பர் 3 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது.ஊனமுற்றோரின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் அனைத்து மக்களும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய இடத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் யாரும் பின் நிற்கக்கூடாது என்ற எண்ணக் கருவினை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகும். ஊனமுற்றோர் எனும் போது இவர்கள் நோயாளிகளாக அல்லாமல் சமூதாயத்தில் நம்பிக்கைக்குரிய பிரஜைகள் என்ற அடிப்படையில் நோக்கப்படுவதுடன் இவர்களும் மனிதாபிமான சிந்தனை மிக்கவர்களே என்பதை மையமாகக் கொண்டு உலகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் படிக்க...
மேலும் படிக்க...
Subscribe to:
Comments (Atom)