SANGAMAM - LIVE NEWS

Tuesday, November 2, 2010

கலெக்டர் சகாயம் தொடங்கிய திருச்செங்கோடு உழவன் உணவகம் தொடருமா?


நாமக்கல் கலெக்டராக இருந்த சகாயத்தால் தொடங்கப்பட்ட திருச்செங்கோடு உழவன் உணவகம் அதிகாரிகளின் இடையூறால் தொடர்ந்து நடைபெறுமா? என விவசாயிகள் சந்தேகமடைந்துள்ளனர்.

விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தரகர்களே லாபம் பெறுவதை தடுக்கும் பொருட்டு விவசாயிகளையே முதலாளிகாளுக்கும் முயற்சியாக அப்போதைய நாமக்கல் கலெக்டர் சகாயத்தினால் கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி நாமக்கல் உழவர் சந்தையில் உழவன் உணவகம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தினை மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தொடங்கி வைத்தார். இதேபோல் அக்டோபர் 23 ம் தேதி திருச்செங்கோடு உழவர் சந்தையிலும் உழவன் உணவகம் விரிவுபடுத்தப்பட்டது.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை மதிப்பூட்டப்பட்ட பொருளாக விற்கும் பொழுது நல்ல லாபம் அடைவார்கள் என்ற நோக்கில் துவங்கப்பட்ட இந்த உழவன் உணவகங்களில் சோளப் பணியாரம், ராகி களி, ராகி தோசை, கீரை இட்லி, அதிரசம்,காய்கறி பக்கோடா, உளுந்தங்கஞ்சி, சுண்டல், ஒப்பிட்டு, ஆட்டுகால் கிழங்கு சூப்பு, கீரை சூப்பு, எள்ளுரண்டை, புட்டு மாவு என பல்வேறு இயற்கையான கிராம உணவு வகைகளை விவசாயிகள் தாங்களே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

காலை நேரத்தில் காய்கறிகள், பால் வகைகள், நாட்டுக் கோழி என விற்பனை நடைபெறும் உழவர் சந்தை காலை 11 மணியுடன் முடிவடைந்து விடும். மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை உழவன் உணவகம் நடைபெறுகிறது.

நாமக்கல், திருச்செங்கோடு உழவன் உணவகத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஓர் ஆண்டு முடிவதற்குள்ளாக ரூ.1.5 கோடி ரூபாய் உணவு பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு சாதனை புரியப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளும் நல்ல பலனடைந்துள்ளனர். உழவன் உணவகத்தில் உணவுப் பொருட்களை விற்பனை செய்து கிடைத்த லாபத்தில் சில விவசாயிகள் கார் வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க.........


allvoices

Wednesday, October 27, 2010

செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனங்களுக்கு மாறும் வசதி

பொது மக்கள் தங்களிடம் உள்ள செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக மாறும் வசதி (என்.என்.பி) வருகிற திங்கட்கிழமை (நவம்பர் 1ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. மேலும்படிக்க

allvoices

Monday, October 25, 2010

தேர்தலில் நிற்க தொகுதி தேடும் துணை சபாநாயகர்


நாமக்கல் கலெக்டராக இருந்த உ.சகாயத்தை பதவி மாற்றம் செய்து அரசியல் பழிதீர்த்து கொண்ட துரைசாமியை பழிவாங்க சில சமூக அமைப்புகள் தேர்தலில் அவருக்கு எதிராக பிரச்சாரம் மூலம் களம் இறங்க தயாராகி வருகின்றன.

இந்த வருத்தத்தை விட தனக்கு எதிராக வீரபாண்டியாரும், நாமக்கல் காந்திசெல்வனும் பண்ணும் பாலிடிக்ஸ்தான் ‘துணை’யை மத்தளமாக இடிவாங்க வைத்திருக்கிறது என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். மேலும் படிக்க....

allvoices

Sunday, October 24, 2010

கெளதம் மேனனை கவிழ்த்த சமீரா ரெட்டி

நடுநிசி நாய்கள் படத்தில் பெட்ரூம் காட்சிகள், கவர்ச்சி படையல் என இளசுகளை கிளுகிளுப்பேற்றும் காட்சிகளில் உணர்ச்சிபூர்வமாக(!!?) நடித்து மேலும் படிக்க...

allvoices

Friday, October 22, 2010

ரத்தசரித்திரத்தால் ஆந்திராவில் போராட்டம் வெடித்தது

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவான ரத்தசரித்ரா ஆந்திராவில் நேற்று வெளியானது. இந்த படத்தில் விவேக் ஓபராய் மற்றும் சூர்யா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் படுகொலை செய்யப்ப்பட்ட தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ., பரிடாலா ரவீவீந்தரா அவருடைய எதிரி மத்தல செருவு சூரி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் அதன் விளைவாக நடந்த தொடர் கொலைகளை அடிப்படையாக கொண்டு ரத்தசரித்திரம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க....

allvoices

Thursday, October 21, 2010

பிரிதிவிராஜை கைவிட்ட ப்ரியாமணி

ரத்த சரித்திரம் படத்தில் நடித்தபோது இந்தி நடிகர் விவேக் ஓபராயும், ப்ரியாமணியும் அடித்து விளையாடும் அளவுக்கு நெருக்கமான நண்பர்களாகிவிட்டனராம்.

தனது நட்பை மேலும் வெளிப்படுத்தும் விதமாக ரத்த சரித்திரத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்ற பொழுது விவேக் ஓபராயை சென்னைக்கு அழைத்து வந்து தனது உறவினர்கள் படைசூழ ஸ்டார் ஓட்டலில் அசைவ விருந்து வைத்தாராம் ப்ரியாமணி. மேலும் படிக்க...


allvoices

தோல்வி பயத்தில் நடிகர் விக்ரம்

விக்ரம் பெரிய அளவில் எதிர்பார்த்த ராவணன் படம் ஏமாற்றி விட்டதால் அவர் தற்பொழுது நடித்து கொண்டிருக்கும் வெடியை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். ஒருவேளை இந்த படமும் தோல்வியடைந்தால் தனது மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடும் என்று உள்ளூர ஆடிப் போயிருக்கிறார் சீயான்... மேலும் படிக்க...

allvoices

Wednesday, October 20, 2010

நாசா சென்று திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு.

அமெரிக்க விண்வெளி ஆராய்சி மையமான நாசாவிற்கு கடந்த 9 ம் தேதி சென்றனர்.ஐந்து நாட்கள் நாசா விண்வெளி ஆராய்சி மையத்தில் தங்கிய மாணவ, மாணவியர் ராக்கெட் தொழில்நுட்பம், ஏவப்படும் முறை, செயற்கை கோள்கள் தொழில்நுட்பம், விண்வெளியில் செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆராய்சி கூடம் ஆகியவை குறித்து அறிந்து கொண்டதுடன். அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் கலந்துரையாடினர். மேலும் விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மேலும் படிக்க....

allvoices

நயன்தாரா வழியில் ஜெனிலியா.

நயன்தாராவைப் போலவே ஜெனிலியாவும் தான் நடித்த படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வதில்லை. வலுக்கட்டாயமாக அழைத்தாலும் இந்தி படத்தின் படப்பிடிப்பு இருக்கிறது என்ற பொய்யை சொல்லி டேக்கா கொடுத்து விடுகிறாராம். மேலும் படிக்க....

allvoices

Monday, October 18, 2010

ரத்தசரித்திரத்தின் கதை

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படம் “ரத்தசரித்திரம்” ஆந்திராவில் உள்ள ராயல்சீமா நகரை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இக்கதை நிஜத்தில் நடந்த கதையாம். அரசியல் தலைவராக விவேக் ஓபராய் நடித்து இருக்கிறார். உலக ரீதியான ஒரு முக்கிய கருத்தை கொண்ட படம் இது. பல மனித உணர்வுகளை இந்த படத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளதாம். ஆந்திரவில் நடந்த உண்மை சம்பவமா? என்ற விஷயத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், மேலும் வாசிக்க....

allvoices

நாமக்கல் கவிஞர் வரைந்த ஓவியம்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஒரு சிறந்த கவிஞர் என்பது அனைவரும் அறிந்தது. அவர் சிறந்த ஓவியர் என்பது ஒரு சிலர் மட்டுமே அறிந்தது. மேலும் பார்க்க...

allvoices

Wednesday, October 13, 2010

கொசுவுக்கும், சாக்கடைக்கும் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் சிமெண்டுக்கு போராட தயங்குவது ஏன்? – கொமுக கேள்வி.

தேர்தலை காரணம் காட்டி சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் ஒரு மாதத்திற்கு ரூ.500 கோடி மோசடி செய்யப்படுகிறது ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி மோசடி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துவருகின்ரனர். ஆனால் கொசுவுக்கும், சாக்கடைக்கும் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் சிமெண்டுக்கு போராட தயங்குவது ஏன்? மேலும் படிக்க....

allvoices

Sunday, October 10, 2010

தமிழ் பயிலும் கன்னட நடிகை

கனகவேல் காக்க படத்தில் கரணுக்கு ஜோடியாக நடித்த ஹரிப்பிரியா, அதன் பிறகு அர்ஜீனின் புதிய படமொன்றில் நடிக்க கமிட்டானவருக்கு இப்போது சேரன் – பிரசன்னா இணைந்து நடிக்கும் முரண் படத்திலும் நாயகி வேடம் கிடைத்துள்ளது. அதனால் தனது தாய் மொழியான கன்னட சினிமாவை கூட ஒரங்கட்டிவிட்ட ஹரிப்பிரியா, மேலும் படிக்க....

allvoices

Saturday, October 9, 2010

கலெக்டர் சகாயம் பணிமாற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் – ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்பு

நாமக்கல் கலெக்டர் சகாயம் பணி மாற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாளை திங்கள் கிழமை நாமக்கல்லில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நாமக்கல் கலெக்டராக இருந்தவர் சகாயம். இவரது நேர்மையான செயல்பாடுகள் காரணமாகவும், தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்களை நேரடியாக சென்று சேர்வதற்கு வழிவகுத்தவர், கிராமங்கள் தோறும் சென்று இரவில் தங்கி மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்வு கண்டவர். மக்களுடன் கலந்து பழகி அவர்களின் குறைகளை தீர்த்தவர். தனது நேர்மையான நடவடிக்கைகள் காரணமாக அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்ப்பிற்கு ஆளானார். மேலும் படிக்க....

allvoices

Friday, October 8, 2010

காது கேளாதவருக்கான செல்போன் – புதுமைக் கருவியைக் கண்டு பிடித்து திருச்செங்கோடு மாணவர் சாதனை

காது கேளாதவரும் செல்போனில் பேசக்கூடிய புதுமைக் கருவியைக் கண்டு பிடித்துள்ளார் திருச்செங்கோடு மாணவர் சுதர்சன்.

திருச்செங்கோடு கூட்டப்பள்ளியைச் சேர்ந்தவர் சுதர்சன் (17). இவர் சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை சிதம்பரம் மெடிகல் ஸ்டோர்ஸ் வைத்துள்ளார். தாய் புஷ்பா குடும்பத்தலைவி. இவர்களுக்கு சுதர்சன் ஒரே மகன். புதிய கண்டு பிடிப்புக்களில் ஆர்வம் கொண்ட சுதர்சன் பல்வேறு கருவிகளை உருவாக்கி பரிசு பெற்றுள்ளார். கைதட்டினால் நிற்கும் மின் விசிறி. எரியும் விளக்கு. ஆட்கள் செல்ல முடியாத இடத்தில் உள்ள மின் கசிவு, வெடிகுண்டு ஆகியவற்றைக் கண்டறியும் கருவி. மணிபர்சில் வைக்கும் எப்எம் ரேடியோ. விபத்து ஏறப்ட்டால் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கும் கருவி ஆகியவை இவரது கண்டு பிடிப்புக்களில் சில.... மேலும் படிக்க....


allvoices

Monday, October 4, 2010

எந்திரன் – சமூக பலகீனத்தின் வெற்றி


இந்த கட்டுரை எந்திரன் திரைப்படம் குறித்த விமர்சனமோ கருத்தோ அல்ல. எந்திரன் திரைப்படம் வெளியீடு குறித்து சன் டிவியில் திரும்ப திரும்ப வந்து கொன்டிருக்கும் விளம்பரங்கள் இந்த கட்டுரையினை எழுதத் தூண்டியது என சொல்லலாம்.

திரைப்படத்தின் முதல் நோக்கம், வியாபார வருமானம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. எந்திரனும் அதற்கு விதி விலக்கல்ல. எந்திரன் வெளிவருவதற்கு முன்பே அதன் வியாபர வெற்றி நோக்கி செய்த விளம்பரங்கள், அதீத அளவில் இருந்தன..

திரைப்படம் வெளியான பின்பு அதனை ஒட்டி சன் டிவியில் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன‌ மேலும் படிக்க....



allvoices

Friday, October 1, 2010

எந்திரன் – அலங்கோலங்கள்


யாரோ பொருளீட்டுவதாற்காக …….. சொந்த பணத்தில் திருவிழா நடத்திய ரசிகர்கள்.மேலும் படிக்க...

allvoices

Thursday, September 30, 2010

பாடம் படிக்க பள்ளிக்கூடம் செல்லும் ஆடு

பள்ளியில் மாணவர்களுடன் சேர்ந்து ஆடு ஒன்றும் பாடம் படிக்கிறது. கர்நாடகா மாநிலம், ராமநகரம் மாவட்டம் சென்னப்பட்ணா தாலுகாவில் உள்ளது அக்கருஹொசஹள்ளி. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கு மாணவர்களோடு ஆடு ஒன்றும் நாள் தவறாமல் சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது கவனிக்கிறது. மேலும் படிக்க...

allvoices

Saturday, September 18, 2010

300 ரூபாயை வைத்துக்கொண்டு 300 கோடிக்கு பேரம் பேசிய தில்லாலங்கடிகள்!

மூன்னூறு ரூபாயை வைத்துக்கொண்டு 300 கோடி ரூபாய்க்கு குமாரபாளையம் நடராஜா கல்லூரியை பேரம் பேசிய இருவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாசிக்க...

allvoices

Thursday, September 2, 2010

வீடு புகுந்து பெண்களை மிரட்டி தாக்குதல், சன் டி.வி, சி.இ.ஒ. உட்பட 30 பேர் மீது வழக்கு

சென்னை, சன் டிவி நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸ்சேனா உட்பட் 30 பேர் மீது பெண்ணை மானபங்கம் செய்தல், கொள்ளை அடித்தல் உட்பட பல்வேறு சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை வேளச்சேரியை சேர்ந்த சவுமித்ரி தர்ம சேனன் (65) என்ற பெண் கிண்டி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது. மேலும் படிக்க...

allvoices

Wednesday, September 1, 2010

பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு லஞ்சம், மனைவி மற்றும் சகோதரருடன் தரகர் கைது

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் கேப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது அமீர், விக்கெட் கீப்பர் கமரன் அக்மல் உள்பட 7 பேர் “ஸ்பாட் பிக்சிங்’ என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை இங்கிலாந்தில் உள்ள முன்னணி பத்திரிகையான “நியூஸ் ஆப் தி வேல்டு” அம்பலப்படுத்தியது.
மேலும் படிக்க...


allvoices

Tuesday, August 31, 2010

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு திட்டம் – வைகோ பகீர் குற்றாச்சாட்டு

“முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம்” என்று வைகோ கூறினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று கோவை வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மேலும் படிக்க....


allvoices

வாய்ப்புக்காக பெயரை மாற்றிய ஸ்ரேயா !


ழை படத்தில் பிரபலமான ஸ்ரேயா அதன் பிறகு சிவாஜி,கந்தசாமி படங்களில் நடித்து பிரபலமானார், என்றாலும் தம்மன்னா, அனுஷ்கா போன்ற நடிகைகளின் அதிரடி பிரவேசத்தால் புதிய படங்கள் கமிட்டாகவில்லை, இந்நிலையில் ஏற்கனவேஅவர் கமிட்டாகிருந்த சிக்குபுக்கு படம் தற்பொழுது ரிசீசுக்கு தயாராக இருக்கிறது. இதனால் ஒருவேளை இந்த படம் வெற்றி பெற்றால் மீண்டும் புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று அதிகமாக எதிர்ப்பாக்கிறார் ஸ்ரேயா. மேலும் வாசிக்க.....

allvoices

Tuesday, March 2, 2010

கோபத்தில் மாத்தியோசி பட நடிகை

மாத்தியோசி படத்திற்காக என்னை பிழிந்து எடுத்தார்கள். சாணி அள்ள வைத்தார்கள். வெயிலில் கஷ்டப்படுத்தினார்கள். ஆனால், பேசின சம்பளத்தை கொடுக்கவில்லை. டப்பிங் பேசக்கூடாது என்று துரத்திவிட்டார்கள். படத்தின் கேசட் வெளியீட்டு விழாவுக்கு முறைப்படி அழைப்பு இல்லை. மேலும் படிக்க...

allvoices

Saturday, January 2, 2010

ஹைடெக் மாவட்டமாக மாறியது நாமக்கல் ! கிராம மக்கள் மனு கொடுக்க வீடியோ கான்பரன்சிங் வசதி

தமிழகத்தில் முதன் முறையாக நாமக்கல் மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மாவட்ட கலெக்டருடன் நேரடியாக குறைகளை தெரிவிக்கும் வகையில் இன்டர்நெட் மற்றும் வீடியோ கான்பரன்சிங் வசதி துவக்க விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சகாயம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார். மாவட்ட போலீஸ் எஸ்.பி பாரி, டிஆர்ஓ சாந்தி ஆகியோர் முன்னிலையில் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் டெலி கான்பரன்சிங் வசதியை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


மேலும் படிக்க..

allvoices
Related Posts with Thumbnails