SANGAMAM - LIVE NEWS

Sunday, June 28, 2009

‘தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் அரசியல் வழியில் போராடும்’- கே.பீ.

விடுதலைப் புலிகள் அமைப்பு வன்முறையைக் கைவிட்டு வன்முறையற்ற வழிகளில் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மீட்கும் எனத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதன் சொல்கிறார்.

ஹெட்லையின் இணையத் தளத்துக்கு 25.06.2009 ல் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தமிழ்ப் புலிகளின் முக்கிய செயற் திட்டங்களில் தமிழ் புலிகள் அமைப்பு அதற்கு எதிரான சர்வதேசத் தடையை நீக்குவதே முதலாவதாக இருக்கும் என்றார் பத்மநாதன்.

அந்த இணையத்தள நேர்காணலின் சில பகுதிகள்.



allvoices

Saturday, June 27, 2009

அக்.23-25.ல் ஜெர்மனியில் தமிழ் இணைய மாநாடு

சென்னை, ஜெர்மனியில் தமிழ் தகவல் தொழில் நுட்பம் குறித்த தமிழ் இணைய மாநாடு அக்டோபர் 23-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

உலக தமிழ் தகவல் தொழில் நுட்பம்-உத்தமம் அமைப்பின் சார்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்றும், இதற்கான இந்தியாவின் துணை தலைவர் வெங்கடரங்கன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் சென்னை பத்தரிகையாளர் மன்றத்தில் மாநாடு தொடர்பான விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் கூறியது:


allvoices

Friday, June 26, 2009

கூட்டுறவு வியாபாரம் : கூட்டுக் கொள்ளை வர்த்தகம்

சென்னை, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கொத்தவால் சாவடிதான் சென்னையின் மிகப்பெரிய வர்த்தக மையம், காய்கறி மொத்தச் சந்தையும், பருப்பு, மிளகாய் வத்தல் என பலவகைப் பொருட்களின் மொத்தச் சந்தையும் கொத்தவால் சாவடியைச் சுற்றியே இருந்தன. கூடவே சில்லறை விற்பனைக்கானபல மளிகைக் கடைகள். அவற்றில் பல கடைகள் இன்றும் பிரபலம்.


allvoices

Thursday, June 25, 2009

உலகத் தமிழர்களுக்காக ஒற்றுமை: முதலமச்சர் உறுதி

சென்னை, இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல உலகின் எல்லாத் தமிழர்களையும் பாதுகாப்பதில் இனிமேலாவது தமிழக தலைவர்கள் இன உணர்வுடன் செயல்பட்டு ஒற்றுமை காக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐரோப்பிய தமிழர்களால் இலங்கை போரினால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாம்களில் வாடும் இலங்கை தமிழர்கள் லட்சக்கணக் கானோருக்கு உணவு, உடை, மருத்துவ பொருட்களை வணங்காமண்- கேப்டன் அலி கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.


allvoices

Thursday, June 18, 2009

இலங்கை எழுத்தாளர் புன்னியமீன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் புன்னியாமீன் அவர்கள் 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு முன்னணி எழுத்தாளராவார். சமூக உணர்வுமிக்க இவரும், இவரது நூல் வெளியீட்டகமான சிந்தனைவட்டமும்: 2002, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாழின் போதும், 2004ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வின் போதும் மாணவர்களின் கல்வியை இலக்காகக் கொண்டு பல்வேறுபட்ட சேவை நலத்திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர். மேலும் கல்வியைத் தொடர வசதி இல்லாத நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர உதவிகளைச் செய்துள்ளதுடன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வசதி குறைந்த மருத்துவ, பொறியியல் துறை மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.


allvoices

Wednesday, June 17, 2009

நாடற்ற இனத்தின் அவலம் - மனுஷ்ய புத்திரன்

சென்னை, இலங்கைத் தமிழர்களின் வீழ்ச்சி விடுதலைப்புலிகளின் வீழ்ச்சி அல்ல என்றும் வேட்டையாடப்பட்ட ஒரு இனக்குழுவின், படுகளத்தில் கைவிடப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வீழ்ச்சிகளின் சரித்திரம் என்றும் தமிழினம் இந்த அழிவிலிருந்து உயிர்த்து எழும் என்று உயர்மை தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியரும் கமலஹாசனின் ஆயிரத்தில் ஒருவன் கதாசிரியருமான மனுஷ்ய புத்திரன் கூறியுள்ளார்.


allvoices

துணை முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பாராட்டு - சட்டசபையில் பரபரப்பு

சென்னை, தமிழக துணை முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையில் அஇஅதிமுக புகழாராம் சூட்டியது. இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர் களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


allvoices

Saturday, June 6, 2009

புலிகளை அரக்கராய்க் காட்டும் போக்கு - இராம.கி.

அண்மையில் தமிழ்மன்றம் மடற்குழுவில், ”சின்னஞ் சிறுவர், ஆடவர், பெண்டிர் மடியில் வெடி குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் சைனைடு வில்லை மாலை சூடிக் கொண்டு ஆயிரக் கணக்கான ஏழை எளியவரைக் கவசச் சுவராகக் கட்டி வைத்துப் போர் புரிவதா அறப்போர் ?” என்றும், “30 வருட ஈழப் போரில 70,000 பேர் மாண்டதில் விடுதலைப் புலிகளின் பங்கு : 55% & சி்ங்கள அரசின் பங்கு : 45%” என்றும் குறிப்பிட்டுச் சாடிக் கருத்து எழுந்தது. இது போன்ற வாசகங்களை எங்கிருந்தோ பரப்புரை ஆவணங்களில் இருந்து தேடிப் பிடிக்கிறார்கள் போலும்.

இந்தியத் திருநாட்டில் இல்லாத குழு அடையாளங்களா? புலிகளிடம் இருந்த / இருக்கிற சில அடையாளங்களை வைத்து அவர்களை அரக்கர்களாய்த் தோற்றம் காட்ட வருவது ஏன்? Why are we demonising the Tigers? As freedom fighters and belonging to an army, they had certain practices, which we may like or dislike.

சீக்கியர் இனத்தில் குரு கோவிந்த் சிங் , ”கல்சா” என்ற இயக்கத்தைத் (அந்தக் காலத்தில், அது ஒரு அரண - military - இயக்கம் தான்.) தொடங்கி, அதன் எல்லா உறுப்பினரும் 5 அடையாளங்களை எப்பொழுதும் வெளிக்காட்ட வேண்டும் என்று ஒரு நடைமுறையை ஏற்படுத்தினார். நீட்ட சடைமுடி(kesh - long hair), சீப்பு (kangha - comb), பிச்சுவாள் (kirpan - dagger), இரும்புக் காப்பு (kara - steel bracelet), குறுங்காற் சட்டை (kaccha - a pair of knicker-bockers) என்ற இந்த அடையாளங்கள் இயக்கத்திற்கு ஒற்றுமையையும், உடன் பிறந்தோர் போன்ற உணர்வையும், ஒக்குமையையும் தந்ததாகவே எல்லோரும் கொண்டார்கள். இந்த அடையாளங்கள் தாங்கள் ஒரு குழு என்ற ஆழ் உணர்வையும் வளர்த்தன. பிச்சுவாள்க் கத்தியை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருப்பதை யாரும் தவறாக இன்றுவரை நினைக்கவில்லை. அது ஒரு வீர உணர்வின் வெளிப்பாட்டாகவே கருதப் பட்டது.


allvoices

Thursday, June 4, 2009

தற்கொலை செய்ய கியூ: ஒரு தற்கொலையின் நேரடி காட்சிகள்

லண்டன், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தற்கொலை கிளினிக்கில், சாவதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 800 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் உள் ளது, "டிக்னிடாஸ்' என்ற பிரபல மருத்துவமனை. கேன்சர் உட்பட உயிரைப் பறிக்கும் பயங்கர நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுயவிருப்பத்தின் பேரில் தற்கொலை செய்து கொள்ள இந்த மருத்துவமனை, சட்டப்படி ஏற்பாடு செய்துவருகிறது.பல நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு வந்து தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்கின்றனர். ஆனால், அவர்களை, சட்ட நிபுணர்களும், டாக்டர்களும் தீர விசாரித்த பின் தான், அவர்கள் சாவதற்குத் தகுதியானவர் என்று சான்றளிக்கின்றனர்.



allvoices

Wednesday, June 3, 2009

பகை, விரோதம் வேண்டாம் : கருணாநிதி வேண்டுகோள்

சென்னை, தேர்தலில் தோற்றவர்கள் பகை பாராட்டாமல் வீணான விரோதம் கொள்ளாமல் நாட்டிற்கும், மக்களுக்கும் பயனுள்ள வகையில் தங்களது அரசியல் பணிகளை தொடர வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதியின் 86 பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் திமுக சார்பில் பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தம்மை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்கி முதலமைச்ர் பேசியது :



allvoices
Related Posts with Thumbnails