SANGAMAM - LIVE NEWS

Thursday, May 28, 2009

பிரபாகரன் பெற்றோரை இலங்கை இராணுவம் கைது செய்த‌து

கொழும்பு:விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி அம்மாள் ஆகியோர் வவுனியா அகதி முகாமில் தங்கியிருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். ஆனால் பிரபாகரன் பெற்றோரை இராணுவம் கைது செய்த‌து காவலில் வைத்துள்ளது .



allvoices

Wednesday, May 27, 2009

இலங்கை ராணுவத் தாக்குதலில் முடமான குழந்தைகள், மருத்துவமனைகளில் கதறும் தமிழர்கள்

இலங்கையில் ராணுவத்தாக்குதலில் கைகால்கள் இழந்து முடமாகி மருத்துவமனைகளில் பரிதவிக்கும் தமிழ் குழந்தைகளின் அவலநிலையைத் தாங்க முடியாமல் பெற்றோர் கதறிக் கொண்டிருப்பதாக இங்கிலாந்தின் ‘கார்டியன்' பத்திரிக்கை வேதனை கட்டுரை வெளியிட்டுள்ளது.



allvoices

Tuesday, May 26, 2009

இலங்கைக்கு இந்தியத்தீர்வு : நீதியும் நியாயமும் அமைதியும்

சென்னை, போருக்குப் பிந்தைய வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டும் இடமளித்துவிட்டு, அரசிய்ல அதிகார பகிர்வு குறித்து இந்தியாவும், சர்வதேச அமைப்புகளும், தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் கவனம் செலுத்தாமல் இருந்து விடக்கூடாது என்று பிரபல எழுத்தாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

2002ல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் யாழ் வளைகுடா பகுதியை இலங்கைத் தீவுடன் இணைக்கும் ஏ-9 சாலை திறக்கப்பட்டது. இதுவும் 2005-ல் போர் துவங்கியவுடன் மூடப்பட்டது. இன்று கொழும்பு நகரிலிருந்து யாழ் செல்ல இருக்கும் ஒரே வழி வான்வழிதான். இது மிகவும் செலவு பிடிக்கும் வழியாகும். இதன் 30 வருட போரில் உடமைகளை இழந்து, வீடுகளை இழந்து, வருமானம் ஈட்டக்கூடிய இளைய சமூகத்தை இழந்து இருக்கும் ஒரு மக்களால் தாக்கப்பிடிக்க முடியாது. நாகரீகத்தின் முக்கிய வெளிப்பாடே போக்குவரத்து வசதிதான். இதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் அனைவருக்கும் உண்டு. அடுத்ததாக, எந்தவிதமான கட்டுமான வசதிகளும் கடந்த 30 வருடத்தில் ஏற்படுத்தப்படவில்லை. அடிப்படை கட்டுமான வசதிகளையும், உருவாக்க வேண்டியது அவசரத் தேவையாகும். கல்வி மற்றும் பொது சுகாதார வசதிகளையும் விரைவாக அனைத்து பகுதிகளிலும் உருவாக்க வேண்டும்.



allvoices

Saturday, May 23, 2009

கிராமத்து சப்ஜெக்ட்டா? - ஒட்டமெடுக்கும் தமிழ் ஹீரோக்கள்

“அழகான ஆறு. சுற்றிலும் பச்சைப்பசேல்னு வயல்வெளிகள். அப்போ, ஒரு தாலாட்டு குரல் மெதுவா கேட்குது. வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டு ஹீரோ வந்துகிட்டு இருக்கார்......... அப்போ......” என்று இயக்குனர்கள் கதை சொல்ல ஆரம்பித்தாலே கோலிவுட் கதாநாயகர்கள் அரண்டு போகிறார்கள். நிறுத்துங்க... நிறுத்துங்க...... இப்படிப்பட்ட கதை வேணாம். நல்ல சிட்டி சப்ஜெக்ட்டா யோசிசிட்டு வாங்க, என்று திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.



allvoices

Friday, May 22, 2009

பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவர் ஆயுள் 72 வயது :மதுரை ஜோதிடர் கணிப்பு

மதுரை, எண்கணித ஜோதிடப்படி பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று மதுரையை சேர்ந்த ஜோதிடர் வளர்பிறை சோழன் என்பவர் கூறியுள்ளார். மதுரையை சேர்ந்த எண்கணித ஜோதிடர் வளர்பிறைசோழன் இதுதொடர்பாக கூறியது:



allvoices

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் - விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறை அறிவிப்பு

கொழும்பு:இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவந்ததுள்ளதாகவும், இறுதிப் போரில் பல விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசும் அதன் ஊடகங்கள் கூறிவருகின்றன.குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனின் இறப்பு குறித்து முரண்பட்ட செய்திகளையே இலங்கை அரசு இதுவரை தெரிவித்துள்ளது.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்றும், அவரது உடலை கைப்பற்றி விட்டோம் என்றும் கூறி ஒரு உடலை வீடியோவாக்கி உலகில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் இலங்கை அரசு வழங்கியது. இதனை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பின.இருந்தாலும் உலகில் உள்ள தமிழர்கள் இந்த காட்சிகளை பார்த்து விட்டு பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.இந்நிலையில் பிரபாகரனின் உடல் என காட்டப்பட்ட உடலை இலங்கை அரசு அவசர அவசரமாக இன்று எரித்து விட்டது.


allvoices

Thursday, May 21, 2009

கேட்ட இடம் தராததால் கருணாநிதி ஆத்திரம் - பதவியேற்பு விழா புறக்கணிப்பு

புதுடெல்லி, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என திமுக அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரவையில் திமுகவிற்கு உரிய பிரதிநிதித்துவம் தராததால் திமுக - காங்கிரஸ் இடையிலான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி தனது டெல்லி பயணத்தை முடித்துகொண்டு சென்னை விரைவதாகவும், மத்திய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என எடுத்துள்ள முடிவு குறித்து தொடர் நடவடிக்கைகளை விவாதிப்பதற்காக திமுகவின் செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் கூடும் என்று புதுடெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



allvoices

Tuesday, May 19, 2009

பிரபாகரன் மரணம், உலகத் தமிழர்கள் ஏற்க மறுப்பு

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவந்ததுள்ளதாகவும், இறுதிப் போரில் பல விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசும் அதன் ஊடகங்கள் கூறிவருகின்றன.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனின் இறப்பு குறித்து முரண்பட்ட செய்திகளையே இலங்கை அரசு இதுவரை தெரிவித்துள்ளது.

பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசின் வெளியுறவுத் துறைச் செயலர் பாலித ஹோஹன்னவும், இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்வல்லவும் கூறினர்.

ஆனால் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் செல்வராஜா பத்மநாபன் பிரபாகரன் நலமுடனும், பாதுகாப்புடனும் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கடுமையான குழப்பம் நீடித்து வந்தது


allvoices

Monday, May 18, 2009

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் அறிவிப்பு.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் இலங்கைஅரசின் பொய்ப்பிரச்சாரத்தை உலகத் தமிழர்கள் நம்பவ வேண்டாம் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.


allvoices

பிரபாகரன் சுட்டுக் கொலை உறுதிப்படுத்தப்படவில்லை என இலங்கை பாதுகாப்புத் துறை தகவல்

கொழும்பு:விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் இன்று காலை போர்ப்பகுதியில் இருந்து தப்பிச்செல்லும் பொழுது இலங்கை ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதிபடுத்தப்படவில்லை என இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.


allvoices

Sunday, May 17, 2009

பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி பலி?, உடலை கண்டுபிடித்ததாக இலங்கை ராணுவம் தகவல்

கொழும்பு: கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.

அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், அமைதி செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோரும் இறந்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.


allvoices

பிரபாகரன் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு த‌ப்பின‌ர்.

முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் க‌ட்டுப்பாட்டிலுள்ள‌ ப‌குதியிலிருந்து பிரபாகரன் பொட்டு அம்மான் உள்ளிட்டவர்கள் ப‌ல‌ப‌ட‌குக‌ளில் பாதுகாப்பான இடங்களுக்கு த‌ப்பின‌ர், என்று ஊர்ஜித‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிவிக்கிற‌து. இதுவிப‌ர‌மாவ‌து:-

சனிக்கிழமை இரவும் ஞாயிறு அதிகாலையிலும் தரை மற்றும் கடல்ப் பகுதிகளில் மோதல்கள் இடம்பெற்றன. இதில், முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் 6 படகுகளை தாம் அழித்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் தப்பிச் செல்ல முற்பட்ட படகு மீதே தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...



allvoices

இலங்கை அரசு பரப்பும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம் - பழ.நெடுமாறன்

இலங்கை போர் குறித்து இலங்கை அரசு பரப்பி வரும் பொய்ச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்,பா.ம.க நிறுவனர் இராமதாசு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.



allvoices

சென்னை, இலங்கை தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு

இலங்கைக்கு பாதுகாப்பு : தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்திற்கு எதிராக நடத்த வந்த போர் இறுதி தொடர்பான புலிகளின் அறிவிப்பு மற்றும் இந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தொடர்பான செய்திகள் பரவியதை அடுத்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.


allvoices

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தற்கொலை?

கொழும்பு: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது உடலை அடையாளம் காண்பதற்காக இலங்கை ராணுவ முகாமிற்கு எடுத்து செல்லப்படுவதாகவும் இலங்கை ராணுவத் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய தொலைக்காட்சியான


allvoices

Saturday, May 16, 2009

தமிழினம் அறுந்து-தோற்றுப்போன தேர்தல் - 2009-நாக.இளங்கோவன்

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே" என்ற கண்ணதாசனின் வரியோடு, "அவன் தறுதலையானது கழகங்களின் ஆட்சியிலே" என்ற வரியை சேர்த்துக் கொண்டு படித்தால் தேர்தல்-2009 பற்றி தன்மானம் இன்னும் கொஞ்சம் உள்ள தமிழ்நாட்டார்க்கு மனத்துயர் வாராது.

இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மூன்று கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

தமிழினத்தைப் படுகொலை செய்த காங்கிரசு வெற்றி பெற்றுள்ளது. போனமுறை 10 இடங்கள். இந்த முறை 9 இடங்கள். ஆகவே அவர்கள் தோற்றார்கள், காங்கிரசுக்குத்
தமிழ்மக்கள் பாடம் புகட்டினார்கள் என்றெல்லாம் யாராவது சொன்னால் நான் நகைப்பேன்.

தமிழினத்தை அழித்த காங்கிரசுக்குத் துணை போன திமுக 18 இடங்களில் வென்றுள்ளது. போனமுறை 16 இடங்கள்.

"துரோகம் பழகு; நக்கிப் பிழை" என்றே இது தமிழ்நாட்டுக் குமுகத்திற்குப் போதிக்கிறது.



allvoices

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 3 கிமீ பகுதியை மீட்டதாக ராணுவம் தகவல்- பிரபாகரன் தப்பினார்

கொழும்பு:இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் இறுதி போரினை நேற்று முன் தினம் தொடங்கியது.இந்த போரில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள வீரர்கள் போர்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளாதுடன், கனரக ஆயுதங்கள், ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

allvoices

Thursday, May 14, 2009

அதிமுகவுடன் காங். கூட்டணி - இந்திய அரசியலில் பரபரப்பு

புதுடெல்லி,பாரளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் முடிவுகளை அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி இருக்கும் இந்த வேளையில் சில தேசிய கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. இந்நிலையில் சில ஆங்கில செய்தி சேனல்கள் இந்திய தேர்தல் குறித்த கருத்துகணிப்பினை நேற்று வெளியிட்டன. அதில் தமிழகத்தில் அதிமுக முன்னிலை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தேசிய கட்சிகள் அதிமுகவை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி முதன்மையானதாக உள்ளதாகத் தெரிகிறது.



allvoices

Tuesday, May 12, 2009

(வீடியோ) முள்ளிவாய்க்கல் மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் தாக்குதல் 47 பேர் படுகொலை

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது இலங்கை ராணுவத்தினர் மீண்டும் இன்று காலை நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 47 நோயாளிகள் படுகொலை செய்யப்பட்டும் 55 பேர் காயமடைந்தும் உள்ளதாக வன்னியில் இருந்து வரும் தகவலகள் தெரிவிக்கின்றன.


allvoices

Sunday, May 10, 2009

ராஜீவ்-ஜெயவர்தனா ஒப்பந்தப்படி இலங்கையில் விரைவில் உரியமுடிவு காணப்படும் - சோனியா காந்தி, சென்னை பேச்சின் முழுவிவரம்

சென்னை, உயிர் இழப்பின் துன்பம் எத்தகையது என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்துள்ளேன். எங்களுக்கு இந்த துன்பம் எத்தகையது என்பது தெரியும், விரைவில் போர்நிறுத்தம் ஏற்படவும், பாதுகாப்பான இடங்களுக்கு இலங்கை தமிழர்களை கொண்டு செல்லவும், மனதாபிமான உதவிகளை உடனுக்குடன் வழங்கவும் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என சோனியாகாந்தி கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதாரித்து சென்னை தீவுத்திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி பேசியது:



allvoices

இலங்கை ராணுவம் கோரத் தாண்டவம், ஒரே இரவில் குழந்தைகள் உட்பட 2500 பேர் படுகொலை !

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் நேற்றிரவு முதல் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் குழந்தைகள்,பெண்கள்,நோயாளிகள் உட்பட 2,500-க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.



allvoices

Saturday, May 9, 2009

இலங்கை,தமிழீழம் சாத்தியம் இல்லாதது - சென்னையில் மன்மோகன்சிங் பேட்டி- முழுவிவரம்

சென்னை, தமிழீழம் அமைவது சாத்தியம் இல்லாதது என்றும் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப வாய்ப்பே கிடையாது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார்.



allvoices

Friday, May 8, 2009

ஜெ.வின் தமிழீழம் கோஷம் தீர்வாகுமா? ஈழ அதரவாளர்கள் பார்வையில்

சென்னை, தமிழக மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ‘தனித்தமிழ் ஈழம்‘ அமைக்க ராணுவம் அனுப்புவேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தனி ஈழம்தான் தீர்வு என்று குரல் எழுந்தபோதெல்லாம் கண்மூடித்தனமாக எதிர்த்தவர் ஜெயலலிதா. “போர் என்றால் சாதாரண மக்கள் சாகத்தான் செய்வார்கள்“ என்று இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் வரை அபூர்வத் தகவல்களை அள்ளிவிட்டவர். இன்று, தேர்தல் காய்ச்சலில் பட்டிதொட்டி எங்கும் சென்று ‘தனிஈழம் அமைத்தே தீருவேன்‘ என்கிறார். பல ஆண்டுகளாக ஈழ அரசியலில் மும்முரம் காட்டி வரும் தமிழீழ ஆதரவாளர்கள் ‘ஜெ‘ வின் இந்த மாற்றத்தை பற்றி கூறியது:



allvoices

Wednesday, May 6, 2009

(ஆடியோ)ஈரோட்டில் காங்.வேட்பாளருக்கு எதிராக சீமான் பேசியது

ஈரோட்டில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் சார்பாக நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சீமான் பேசியதன் ஒலிப்பதிவு.


allvoices

(வீடியோ) இலங்கை தடுப்பு முகாம்களில் தமிழ் இனத்திற்கு நடக்கும் கொடுமைகள்

வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் அடைக்கப்பட்டுள்ள 'வதைத் தடுப்பு முகாம்'களில் உணவு,குடிநீர் இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன; குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றனர்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.


allvoices

Tuesday, May 5, 2009

தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வு :ராஜபக்சே சபதம்

கொழும்பு, இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்து, தமிழர் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பேன் என்று ராஜபக்சே சபதம் செய்துள்ளார்.
ஜப்பானில் இருந்து வந்துள்ள சிறப்பு தூதர்யசுஷி அகாஷியுடன் நடந்த சந்திப்பின் போது, ராஜபக்சே கூறியதாவது:-

இலங்கையில் பயங்கர வாதத்துக்கு முடிவு கட்ட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தோற்கடிக்கப்பட வேண்டும். இலங்கை மக்கள் அனைவரும், சகோ தரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் ஒன்றாக வசிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.



allvoices

Sunday, May 3, 2009

கோவையில் ராணுவம் மீது தாக்குதல்: 200 பேர் மீது வழக்கு 13 பேருக்கு ஜெயில்

இருகூர், கோவையில் ராணுவ லாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


allvoices

Saturday, May 2, 2009

வீடியோ: கோவையில் இராணுவ வாகனங்கள் மீது தாக்குதல்

வீடியோ: கோவையில் இராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் பார்க்க

கிளிக் செய்க

allvoices

கோவை,இலங்கைக்கு அனுப்ப இருந்த ராணுவ வீரர்கள் மீது பெரியார் திகவினர் தாக்குதல்

கோவை,இலங்கைக்கு அனுப்ப இருந்த ராணுவ வீரர்கள் மீது பெரியார் திகவினர் தாக்குதல்


allvoices

Friday, May 1, 2009

தமிழர் துரோகிகளை தமிழகத்திலிருந்து விரட்ட பாரதிராஜா பிரச்சாரம்

சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் விரோத சக்திகளை தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 4-ம் தேதி முதல் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் என்று திரையுலக தமிழ் இன உணர்வாளர்கள் அமைப்பின் சார்பில் இயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், சுந்தர்ராஜன் ஆகியோர் கூறியது.

தமிழர் விரோத சக்தியை பேரறிஞர் அண்ணா ஏற்கனவே அடையாளம் காட்டியுள்ளார்.



allvoices

வெறுப்பு (செருப்பு) வீச்சு!

அமெரிக்கா கண்டத்திலிருந்து ஆசியா கண்டம் வரை, மக்கள் வெறுப்பை காட்டும் சம்பவமாக "செருப்பு வீச்சு சம்பவங்கள்" மாறிவிட்டது.

இந்திய தேர்தல் களத்தில் செருப்பு வீச்சு அதிகரித்து வருகிறது. செருப்பு இதற்காகவா மனித சமூகம் கண்டுபிடித்தது.

தமிழகத்தில் சங்க இலக்கியங்களில், காலணி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அகநானூற்றில், 'தடி புதை தொடு தோல் மறையவேகி' 101 - (5 - 9) வீரர்கள் கடுமையான தரையில் நடக்க காலணிகளை அணிந்தனர் என்றும், கடற்கரைப் பகுதியில் உமணர்கள் தோலினால் ஆன காலணியைப் பயன்படுத்தினர் எனவும் குறிப்பிடுகிறது. தோல்புதை சீரற்றடிக் கோலுடை உமணர் (191 -4).


allvoices
Related Posts with Thumbnails