முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்து பிரபாகரன் பொட்டு அம்மான் உள்ளிட்டவர்கள் பலபடகுகளில் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பினர், என்று ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. இதுவிபரமாவது:-
சனிக்கிழமை இரவும் ஞாயிறு அதிகாலையிலும் தரை மற்றும் கடல்ப் பகுதிகளில் மோதல்கள் இடம்பெற்றன. இதில், முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் 6 படகுகளை தாம் அழித்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் தப்பிச் செல்ல முற்பட்ட படகு மீதே தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment