கொழும்பு:இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவந்ததுள்ளதாகவும், இறுதிப் போரில் பல விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசும் அதன் ஊடகங்கள் கூறிவருகின்றன.குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனின் இறப்பு குறித்து முரண்பட்ட செய்திகளையே இலங்கை அரசு இதுவரை தெரிவித்துள்ளது.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்றும், அவரது உடலை கைப்பற்றி விட்டோம் என்றும் கூறி ஒரு உடலை வீடியோவாக்கி உலகில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் இலங்கை அரசு வழங்கியது. இதனை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பின.இருந்தாலும் உலகில் உள்ள தமிழர்கள் இந்த காட்சிகளை பார்த்து விட்டு பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.இந்நிலையில் பிரபாகரனின் உடல் என காட்டப்பட்ட உடலை இலங்கை அரசு அவசர அவசரமாக இன்று எரித்து விட்டது.
Friday, May 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment