SANGAMAM - LIVE NEWS

Tuesday, May 19, 2009

பிரபாகரன் மரணம், உலகத் தமிழர்கள் ஏற்க மறுப்பு

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவந்ததுள்ளதாகவும், இறுதிப் போரில் பல விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசும் அதன் ஊடகங்கள் கூறிவருகின்றன.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனின் இறப்பு குறித்து முரண்பட்ட செய்திகளையே இலங்கை அரசு இதுவரை தெரிவித்துள்ளது.

பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசின் வெளியுறவுத் துறைச் செயலர் பாலித ஹோஹன்னவும், இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்வல்லவும் கூறினர்.

ஆனால் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் செல்வராஜா பத்மநாபன் பிரபாகரன் நலமுடனும், பாதுகாப்புடனும் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கடுமையான குழப்பம் நீடித்து வந்தது


allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails