புதுடெல்லி, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என திமுக அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரவையில் திமுகவிற்கு உரிய பிரதிநிதித்துவம் தராததால் திமுக - காங்கிரஸ் இடையிலான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி தனது டெல்லி பயணத்தை முடித்துகொண்டு சென்னை விரைவதாகவும், மத்திய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என எடுத்துள்ள முடிவு குறித்து தொடர் நடவடிக்கைகளை விவாதிப்பதற்காக திமுகவின் செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் கூடும் என்று புதுடெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment