SANGAMAM - LIVE NEWS

Saturday, February 28, 2009

புதுகுடியிருப்பை கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் தகவல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை இலங்கை ராணுவத்தின் 58 வது படைப்பிரிவு இன்று கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக புதுகுடியிருப்பு நகரினை கைப்பற்றுவதற்காக இலங்கை ராணுவத்தினர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.இதனை விடுதலைப் புலிகள் எதிர்த்து போரிட்டு இலங்கை ராணுவத்தினர் புதுகுடியிருப்பை நோக்கிய முன்நகர்வுகளை தேக்கி வைத்து, கடுமையான பதிலடி கொடுத்து வந்தனர். இந்த போரில் 900 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள்


allvoices

Friday, February 27, 2009

இந்திய அவசர கால மருத்துவ குழு இலங்கைக்கு பயணம்

மேலும் படிக்க...

allvoices

உக்கிரமடைகின்றது வன்னிப் போர்; சிங்களப் படைகள் முடக்கம்: 900 ராணுவத்தினர் பலி:

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற இலங்கை இராணுவத்தினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் தாக்குதல், விடுதலைப் புலிகளினால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இந்த சண்டையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:



allvoices

இலங்கை போர் விமானத்தை விடுதலை புலிகள் சுட்டு வீழ்த்தினர் ?.

முல்லைத் தீவுப் பகுதியில் குண்டு வீச வந்த இலங்கை விமானப் படையின் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளே இதனை வீழ்த்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இன்று காலை 11.25 மணியளவில் முல்லைத் தீவை நோக்கி குண்டுகளை வீச வந்த கிஃபீர் ரக குண்டு வீச்சு விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதை முல்லைத் தீவு பகுதி மக்கள் கண்டுள்ளனர்.



allvoices

Thursday, February 26, 2009

ஈழத்தமிழருக்காக தீக்குளிக்க வேண்டாம்: வைகோ

ஈழத்தமிழருக்காக தீக்குளிக்கும் தமிழர்கள் குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ''இந்திய வம்சாவளித் தமிழரான கோகுலரத்தினம் இலங்கைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்ற குடும்பத்தில் பிறந்தவர்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனையூர் ஊராட்சி காந்தி நகரில் சிலோன் கொலனியில் வசித்து வந்தார். ஈழத்தமிழர்கள் படும் துன்பத்தை எண்ணி பல நாட்களாக வேதனையில் தவித்து வந்துள்ளார். தியாகி முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது மனம் வெதும்பி வருந்தி உள்ளார். அவர் வசிக்கின்ற அத்தெருவில் முத்துக்குமார் வீரவணக்க சுவரொட்டிகள் காணப்படுகின்றன.

அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் தீக்குளித்து உடல்கருகி அந்த இடத்திலேயே இறந்து விட்டார். அவர் எழுதிய கடிதமும், ரேசன் அட்டையும் பக்கத்தில் கிடந்தது. அக்கடிதத்தில் ஈழத் தமிழருக்காகத் தீக்குளிக்கிறேன் என்று ஒன்றுக்கு மூன்று முறை குறிப்பிட்டு எழுதி உள்ளார்.



allvoices

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் டி.ஏ. உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் டி.ஏ. உயர்த்தப்பட்டது. இது கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பல சலுகைகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. உற்பத்தி, சேவை வரியை 2 சதவீதம் குறைப்பதாக நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் பிரணாப் முகர்ஜி, நேற்று முன்தினம் அறிவித்தார்.


allvoices

திறந்தநிலை பல்கலையில் பெறும் முதுநிலை பட்டம் செல்லாது - சுப்ரீம் கோர்ட்

இளநிலை பட்டம் பெறாமல், யாரும் முதுநிலை பட்டம் பெற முடியாது என்ற யுஜிசியின் விதி செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி மையத்தின் முதல்வராக ரமேஷ் என்பவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சிபிமாதன் கேப்ரியல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். ரமேஷ், 3 ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு முடிக்காமல் அண்ணாமலை பல்கலைக்கழக திறந்தநிலை கல்வியின் மூலம் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார்.


allvoices

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சுடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 600 படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நேற்று மாலை கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதில் 35 படகுகளை சுற்றி வளைத்து, அவற்றில் இருந்த ஜி.பி.எஸ். கருவிகள், செல்போன்களை பறித்துக் கொண்டனர். வலைகளை அறுத்து சேதப்படுத்தினர். மீனவர்களை சரமாரியாக தாக்கி, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அள்ளிச்சென்றனர். உயிர் பிழைத்தால் போதும் என மீனவர்கள் அங்கிருந்து தப்பி நேற்று நள்ளிரவு கரைக்கு திரும்பினர்.



allvoices

Wednesday, February 25, 2009

உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து போர்நிறுத்தம் செய்யமாட்டோம் - இலங்கை பிரதமர்

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நெருக்கடிகளுக்கு பணிந்து போர்நிறுத்தம் செய்ய மாட்டோம் என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசி நகரமான புதுக்குடியிருப்பையும் பிடித்து விட்டதாக ராணுவம் இன்று அறிவித்துள்ளது. ஆனால் புலிகள் தரப்பில் இதனை மறுத்துள்ளனர். அங்கு கடும் யுத்தம் நடைபெற்று வருவதாக ஏஜென்சி செய்திகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெறும் யுத்தத்தில் அப்பாவி மக்கள் பலியாவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. இரு தரப்பினரும் அமைதிபேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை வைத்தது. இதே கோரிக்கையை சில தினங்களுக்கு இங்கிலாந்து முன்வைத்தது. இலங்கைக்கு அதிக பொருளாதார உதவி அளிக்கும் ஜப்பான் நாடும், போரில் அப்பாவி மக்கள் பலியாவது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.


allvoices

ஆந்திராவில், சிவனை அழைத்து வருவதாக கூறி அக்னி குண்டத்தில் குதித்த இருவர் பலி

சிவனை அழைத்து வருவதாக கூறி 2 பக்தர்கள் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டம் ஜெய்சூர் மண்டலம் சிவனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தேவதாஸ் (23). சீதாராம் (27). இருவரும் சிவபக்தர்கள். பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கும் இந்த குக்கிராமத்தில் தேவதாஸ், சீதாராம் இருவரும் சிவன் கோயில் கட்டி அங்கேயே வசித்து வந்தனர். இவர்களுடன் அதேபகுதியை சேர்ந்த 9 பேர் சிஷ்யர்களாக உள்ளனர்.



allvoices

Tuesday, February 24, 2009

புலிகளின் கடைசி நகரமும் வீழ்ந்தது - கெகிலிய ரம்புக்வெல

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்த கடைசி நகரான புதுக்குடியிருப்பினையும் இலங்கையின் 58 ஆவது படையணியினர் கைப்பற்றி விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்த அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற கடுமையான மோதலின் பின்னர் புதுக்குடியிருப்பு நகர் இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது என கூறினார்.



allvoices

சென்னை, கோட்டையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் 140 பேர் கைது

இலங்கை இனப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயற்சித்த மாணவர்கள் 140 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், சிறிலங்கா படையினருக்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாகச் சென்றபோது அவர்களைக் காவல்துறையினர் நடுவழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



allvoices

தனித்தமிழகம் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை - காங் கோரிக்கை

தனித்தமிழகம் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் சுதர்சனம் வலியுறுத்தினார்.

தனித்தமிழகம் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனித்தமிழகம் கோரும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் வலியுறுத்தியது.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், ‘‘கடலூரில் தீக்குளித்து இறந்த தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தில் நடந்த கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும்" என்றனர். அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி வழங்கினார்.



allvoices

மதுரை, கோவை, திருநெல்வேலியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம் - அமைச்சர் தகவல்

மதுரை, கோவை, சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்விநேரத்தின்போது திமுக உறுப்பினர்கள் அப்பாவு, குத்தாலம் அன்பழகன், இ.எஸ்.எஸ்.ராமன் (காங்), நன்மாறன் (மார்க்சிஸ்ட்) ஆகியோரது கேள்விகளுக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதில் அளித்து பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 2006 ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அண்ணாநகரில் அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் மூலம் பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.60 லட்சம் செலவு என்று கணக்கிடப்பட்டது. ஆனால் செலவு ரூ.62 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்தது.



allvoices

துரைமுருகன் அழைப்பை வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் புறக்கணிப்பு - பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

ஐகோர்ட் மோதல் சம்பவம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று காலை நடக்கவிருந்த பேச்சுவார்த்தைக்கு, வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் யாரும் வராததால் ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டில் கடந்த 19-ம் தேதி வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மோதலின்போது ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தர, ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி ஞானபிரகாசம் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.



allvoices

இலங்கை, இருதரப்பினரும் சண்டையை நிறுத்த வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கையில் நடைபெறும் போரில் அப்பாவி மக்கள் அதிகளவில் பாதிப்பது கவலையளிப்பதால், ராணுவத்தினரும், புலிகளும் சண்டை நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்க வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக போர் தீவிரமடைந்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை ராணுவம் கைப்பற்றியது. இந்த சண்டையில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். போர் முனையில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களின் நிலை கவலையளிப்பதாக ஐ.நா. உள்பட பல நாடுகள் கவலை தெரிவித்தன. இரு தரப்பினரும் சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நாவும், மற்ற நாடுகளும் கோரிக்கை விடுத்தன.


allvoices

Monday, February 23, 2009

இசைப்புயலின் சாதனை பயணம்

சர்வதேச அளவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக விளங்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதையும் வென்று இந்தியாவுக்கும், தமிழகத் திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தனது இசையால் வசீகரித்து இசைப்புயலாக உருவான ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனை பயணம் 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் ஆரம்பமானது.

இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர். இவரது மகனாக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார் ஏ.எஸ்.திலீப் குமார். இவர்தான் இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான்.ரஹ்மானுக்கு 9 வயதாக இருந்தபோது தந்தை சேகர் மரணமடைந்தார். இதனால் குடும்பம் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது. வீட்டில் இருந்த இசைப் பொருட்களையெல்லாம் விற்றும், வாடகைக்கு விட்டும் ஜீவனம் நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலை.



allvoices

அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை- ஜெயலலிதா

தமிழகத்தில் காவல் துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதும் கருணாநிதிக்குத் தெரியவில்லை என்று அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே ஒரு சுய நோக்கத்தின் அடிப்படையில் "உண்ணாவிரதம்'' நாடகத்தை மருத்துவமனையில் துவக்கப் போவதாக
அறிவித்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய ஒரு முதலமைச்சர் காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டிருப்பது இதுவரை கண்டதில்லை.

தமிழ்நாட்டில் எந்தவொரு காரியத்திற்காக அமைதியாக யார் கிளர்ச்சி நடத்தினாலும், அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கு வழி வகுத்து, திமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று கனவு காண்பதாக தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.



allvoices

திமுக ஆட்சியை கவிழ்க்க சதி - துரைமுருகன் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வன்முறை சம்பவம் தூண்டி விடப்பட்டுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப் பேரவையில் கூறினார்.

சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பல்வேறு உறுப்பினர்கள் இலங்கை பிரச்னை குறித்து பேசினர்.

இதைதொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

வழக்கறிஞர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். இதில் எந்த பிரச்னையும் இல்லை. பிரச்னை எதில் என்றால் சுப்பிரமணியசாமி என்ற நபர் முன்னறிவிப்பின்றி உயர்நீதிமன்றம் வந்தபோது அவர் மீது முட்டைகள் வீசப்பட்டன. எந்த வழக்கறிஞரும் சட்டை பையில் அழுகிய முட்டையை எடுத்து செல்ல மாட்டார்கள்.



allvoices

உண்ணாவிரதம் அறிவித்தது ஏன் ? - கருணாநிதி விளக்கம்

வழக்கறிஞர்கள் - காவல்துறையினர் இடையே மோதல் உருவாகாதா, ரத்தம் வடியாதா அதில் இன்பம் காண முடியாதா என்று ஏங்குபவர்களுக்கு இடம்கொடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் உண்ணாவிரத அறிவிப்பை வெளியிட்டேன் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் உண்ணாவிரதம் இருக்கலாமா? அது உடல் நிலையை மேலும் பாதிக்காதா? வழக்கறிஞர்கள் போராட முன்வந்தது எதற்காக? இலங்கை தமிழர்களின் நலன் கருதி தானே. இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்காக நீங்கள் பாடுபட்டது இன்று நேற்றிலிருந்தா? அரை நூற்றாண்டுக்கு மேலாக அல்லவா நீங்கள் அதற்காக எழுதியும், பேசியும், செயல்பட்டும் வருகிறீர்கள் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்விகள்.



allvoices

வான் புலிகளின் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் இலங்கை அரசு தனது விமானப்படையை முழுவதும் இழந்திருக்கும் - கெஹலிய ரம்புக்வெல

விடுதலைப் புலிகளின் வான் தற்கொலைத் தாக்குதல் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இலங்கை அரசு தனது விமானப்படையை முழுவதுமாக இழந்திருக்கும் என அரசின் பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் விமானப்படையென்ற ஒன்று இங்கு இருந்திருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த விமானங்கள் தமது இலக்குகளை அடைய முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்டமையால் பெரிய இழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளிடம் இறுதியாக இருந்த இரு விமானங்களுமே வெள்ளிக்கிழமை இரவு அழிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான மகத்தான வெற்றி என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



allvoices

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார் - ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு 8 விருதுகள்!

அகடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட் அண்ட் சயின்சஸ் என்ற அமைப்பின் மூலமாக திரைத்துறையில் உலக அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. 1929-ம் ஆண்டு முதல் திரைத் துறையில் பல்வேறு பிரிவுகளுக்கும் வழங்கப்படும் இந்த விருது இந்தியாவில் உருவாக்கப்பட்ட "ஸ்லம்டாக் மில்லியனர்" படத்துக்கு 8 விருதுகளை வழங்கியுள்ளது.

இந்த படத்தின் மூலம் சிறந்த இசைஅமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் (ஜெய் ஹோ) இந்திய இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்தன. சிறந்த படம், சிறந்த இயக்கம் (டேனி பாய்ல்), ஒளிப்பதிவு (அந்தோணி டாட் மேன்டில்), தழுவல் திரைக்கதை (சைமன் பீபோய்), சவுண்ட் மிக்ஸிங் (ரசூல் பூக்குட்டி), எடிட்டிங் (கிறிஸ் டிக்கன்ஸ்) என மொத்தம் 8 விருதுகளை ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு வழங்கப்பட்டது.



allvoices

Sunday, February 22, 2009

திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய - வக்கீல்கள் கோரிக்கை

சென்னை: நீதித்துறை 356-வது பிரிவை பயன்படுத்தி திமுக அரசை கலைக்க உத்தரவிட வேண்டும் என நேற்று நடந்த கூட்டத்தில் வக்கீல்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் நீதி மன்றங்களை வரும் செவ்வாய்க் கிழமை வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய தமிழ் நாடு பார் கவுன்சில் அலுவலக கட்டிடத்தில் வக்கீல்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.


போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே நடந்த மோதல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்தனர். வக்கீல் சங்கத் தலைவர் பால்கனகராஜ் பேசும்போது, கடந்த 19-ந் தேதி நடந்த மோதல் சம்பவத்தை சில தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின. அதனை தமிழகத்திலிருந்து சென்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவர் உடனடியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு டிவியை பார்க்க சொல்லி இருக்கிறார். அதை பார்த்த தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு, என்ன நடக்கிறது? என்று கேட்டிருக்கிறார். நிலைமை சரியாக இல்லையென்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த நீதிபதி சென்னைக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளார். அவரிடம் நடந்தவைகளை எடுத்துக் கூற வேண்டும்.

பிரச்சனை நடந்து கொண்டிருந்ததை கண்ட நீதிபதிகள் மீதும் கற்கள் வீசப்பட்டுள்ளன. நீதித் துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே இருந்த பிரச்சனை வக்கீல்கள், போலீஸ் மோதலாக உருவாக்கப்பட்டுள்ளது. முட்டை வீசியதில் தவறு செய்த 20 பேர் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு ஒட்டு மொத்த வக்கீல்களை தாக்கியுள்ளனர். இது நீதித்துறைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானமாகும் என்று கூறினார்.


allvoices

நதிநீர் பங்கீட்டு பிரச்னைகளுக்கு தேசிய நதிகள் இணைப்பு திட்டமே நிரந்தர தீர்வாகும் - கருணாநிதி

சென்னை: நதிநீர் பங்கீட்டு பிரச்னைகளுக்கு தேசிய நதிகள் இணைப்பு திட்டமே நிரந்தர தீர்வாகும் என பாளையில் நதிகள் இணைப்பு திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி பேசினார்.

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தவாறு, நதிகள் இணைப்பு திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கிவைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நீர் பற்றாக்குறை பிரச்னை உள்ளது. நதிநீர் பங்கீட்டு பிரச்னைகளுக்கு தேசிய நதிகள் இணைப்பு திட்டமே நிரந்தர தீர்வாகும். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தின் முதல்கட்டமாக மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டங்களையாவது செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் பேசினேன். பாசன வசதிக்கான நிதியுதவி திட்டத்தின் கீழ் மத்திய அரசு இதற்கு நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டது.



allvoices

புலிகளின் விமானத் தாக்குதல் எதிரொலி சமாதானப் பேச்சுக்கு வருமாறு கூறுகிறார் பிரணாவ் முகர்ஜி

விடுதலைப் புலிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் இப்போது போர் நிறுத்தம் குறித்து இலங்கையிடம் கோர முடியாது என்றும் அண்மையில் பாராளுமன்றத்தில் பேசியிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாவ் முகர்ஜி விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்நடைபெற்றுள்ள நிலையில், சிறிலங்காஅரசும் விடுதலைப் புலிகளும் சமாதானப் பேச்சு மூலமான தீர்வுக்கு முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.



allvoices

பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்னைக்கு உடனடித் தீர்வு -இல.கணேசன்

லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ. ஆட்சிக்கு வந்தால், இலங்கை பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி காஞ்சி கிராமத்தில் பா.ஜ. தொகுதி மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநில பொதுச் செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் இல.கணேசன் பேசியதாவது:



allvoices

கோவை சிறையில் மோதல் 3 வார்டன் உட்பட 7 கைதிகள் காயம்

கோவை சிறையில் இன்று கைதிகளுக்கும், வார்டன்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கைதிகள் தாக்கியதில் 3 வார்டன்களின் மண்டை உடைந்தது.

கோவை மத்திய சிறையில் சுமார் 1500 கைதிகள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமைதோறும் கைதிகளை மகிழ்விக்க, அங்குள்ள அரங்கில் பெரிய ஸ்கிரீன் மூலம் திரைப்படம் காண்பிப்பது வழக்கம். இன்று ரஜினி நடித்த சிவாஜி படம் காண்பிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் படம் பார்த்தனர்.

படம் முடிந்து அரங்கில் இருந்து கைதிகள் வெளியேறியபோது, வார்டர் பாலசுப்பிரமணியம், சீக்கிரம் வெளியே போங்கள் என கூறியுள்ளார். அப்போது ஆயுள் தண்டனை கைதிகள் இருவர், எதற்காக இப்படி விரட்டுகிறீர்கள். இன்று ஒருநாள் மட்டுமாவது ப்ரீயாக விடக்கூடாதா? என கேட்டுள்ளனர். அப்போது அவர்களை வார்டர் பாலசுப்பிரமணியம் கண்டித்து, தாக்கியதாக கூறப்படுகிறது. பாலசுப்பிரமணியத்துக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட வார்டர்கள் அங்கு வந்தனர்.



allvoices

இன்டர்நெட்டில் ஆஸ்கர் விருது பட்டியல் வெளியாகி பரபரப்பு

இன்டர்நெட்டில் வெளியான ஆஸ்கர் விருது பட்டியல் போலியானது என ஆஸ்கர் அமைப்பு கூறியுள்ளது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் உள்ள கொடாக் தியேட்டரில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆனால், அதற்குள் ஆஸ்கர் விருதுகளின் பட்டியலை ஒரு இணைய தளம் வெளியிட்டு விட்டது. அந்த பட்டியலில் ஆஸ்கர் அகடமி தலைவர் சிட் கானிஸின் கையெழுத்தும் இருந்தது. அதனால் அந்த பட்டியல் உண்மையென பலர் நம்பினர்.

allvoices
Related Posts with Thumbnails