SANGAMAM - LIVE NEWS

Thursday, April 30, 2009

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை இலங்கை அரசு புறக்கணிக்கிறது - பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு

இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்பட வ‌லியுறு‌த்‌தி ம‌க்க‌ள் உ‌ரிமை கூ‌ட்டமை‌ப்பு சா‌ர்‌பி‌ல் த‌மி‌ழ்நாடுவா‌ழ் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் ஒரு நா‌ள் அடையாள உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌ம் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்றது.

இ‌ந்த போரா‌ட்ட‌த்‌தி‌ல் இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன், த‌மி‌ழ் ஆ‌‌ர்வல‌ர்க‌ள் ‌தியாகு, புகழே‌ந்‌தி, ‌த‌ங்கராஜா, ‌தி‌ரு‌ச்‌சி வேலு‌ச்சா‌மி, ‌விடுதலை ராஜே‌ந்‌திர‌ன், வை‌த்‌திய‌லி‌ங்க‌ம், ‌க‌விஞ‌ர் தாமரை உ‌ள்பட ஏராளமானோ‌ர் கல‌ந்து கொ‌ண்டு உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌த்தை ஆத‌ரி‌த்து பே‌சின‌ர்.

allvoices

Wednesday, April 29, 2009

இலங்கை பிரச்சனையில் கருணாநிதி - ராஜபக்சே கூட்டு சதி - ஜெயலலிதா பகீர் குற்றச்சாட்டு

தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி ராஜபக்சவுடன் சேர்ந்து கூட்டு சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நாமக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, உண்ணாவிரத நாடகம் நடத்தி; தான் உண்ணாவிரதம் இருந்ததால், உடனே இலங்கை அரசு, போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டது; எனவே தனது உண்ணாவிரதத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று அறிவித்துவிட்டு, வந்த வேகத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிவிட்டார் கருணாநிதி.

allvoices

Tuesday, April 28, 2009

இந்தியா தான் சிங்கள ராணுவத்தை வழி நடத்தியது- பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

மும்பை, சிங்கள் ராணுவத்திற்கும் , தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது,

கடந்த வருடம் சனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகள் ஏற்பட்டது, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது.

allvoices

பிரபாகரன் தப்பினார்

கொழும்பு, போர் பகுதியில் இருந்து பிரபாகரன் தப்பிச் சென்று விட்டதாக விடுதலைப் புலி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ.நிலப்பரப்புக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அங்கு தான் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாக கருதப்பட்டது.

பிரபாகரன், நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கக் கூடும் என்று ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் மூத்த தலைவர் தயாமாஸ்டர் தெரிவித்தார்.

allvoices

Monday, April 27, 2009

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் ஏன்?

ஆறேழுமாதங்களாக இலங்கையில் இட்லர் அராசபக்சேவின் அகோரபசிக்கு ஈழத்தமிழர்கள் நாள்தோறும் இரையாகி, வாழும் இல்லங்களே அவர்களுக்கு கல்லறையாக மாறியது; இல்லங்களை விட்டு காடுகளில் தஞ்சம் புகுந்தனர் நம் தமிழர்கள். அவர்கள் நொடிக்கு நொடி மரணபயத்தோடு மரத்தடிகளில் வானமே கூரையாகக் கொண்டு இருந்தபோதுகூட குண்டுகளை வீசி குடும்பம் குடும்பமாக கொன்று குவித்து எங்கும் பிணக்காடாக மாற்றி மகிழ்ந்தது மகிந்தவின் அரசு. சரணடையுங்கள் அல்லது செத்து மடியுங்கள் http://thelede.blogs.nytimes.com/2009/04/20/endgame-in-sri-lanka/?hp என்ற குறிக்கோளோடு கொன்று குவித்துவருகிறது. தங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கும் இந்த‌ நேரத்தில் யாராவது போரை நிறுத்த மாட்டார்களா, இந்த மரணபயத்திலிருந்து விடுதலை கிடைக்காதா? என்று தம் தொப்புள்கொடி உறவாக எண்ணியிருக்கும் தமிழகத்தை எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்ன?

allvoices

இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் - ஜெயலலிதா

திருப்பூர்:இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

allvoices

அட்சய திரிதியையின் பெருமை

குறைவில்லாத நிறைவு அதுதான் அட்சயம் என்ற சொல்லின் பொருள். வளரக்கூடியது; பெருகக் கூடியது; செழித்தோங்கக் கூடியது அட்சயம் எனப்படும்.

அட்சய திரிதியைப் பற்றி வெவ்வேறுவிதமான வரலாறுகளை அண்மைக்
காலத்தில் சொல்லி வருகிறார்கள். வளர்ச்சி தொடர்பாக சொல்லப்படும் புராணக் கதைகள் அவை.

மணிமேகலை மாதவியின் மகள். இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் பாட்டுடைத் தலைவி சீத்தலைச் சாத்தனார் என்பவரால் எழுதப்பட்டதுதான் மணிமேகலை. இந்த நூலில் மணிமேகலையின் கையில் ஒரு அமுதசுரபி இருந்தது. அது ஆபுத்திரன் கையில் இருந்த அமுதசுரபி. அள்ள அள்ளக் குறையாமல் வளரக்கூடிய தன்மை படைத்த பாத்திரத்தைத் தான் அட்சய பாத்திரம் என்று சொல்வார்கள்.

allvoices

கருணாநிதி உண்ணாவிரதம் முடித்து அற்றிய உரை - முழு விவரம்

சென்னை, இலங்கைப் போர் நிறுத்த அறிவிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தை முடித்து வைத்த திமுக தலைவர் கருணாநிதி உரை.

முழு விபரம்

1924-ம் ஆண்டு ஜூன் திங்கள் 3-ம்நாள் முத்துவேலர் என்கிற இசைத் தமிழ் தந்தைக்கும்-அஞ்சுகம் என்கிற அன்னைக்கும் திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, ‘குவா குவா’ என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பிய அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து பொருட்களைக் களவாடிய போது, அவர்களிலே யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தமிழ் என்கிற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது.

allvoices

Sunday, April 26, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (9)

இர‌ட்டை வேட‌ம் அல்ல‌ இருக்கும் வேட‌ம் எல்லாம் போடுப‌வ‌ர்தான் க‌ருணா(அ)நிதி

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்.

க‌ம்யூனிஸ்ட்டுக‌ள் இர‌ட்டை வேட‌ம் போடுவ‌தாக‌ ஒரு க‌விதை எழுதியிருக்கிறீர்க‌ள்!

அந்த‌க் அக்விதையைப் ப‌டித்து அழுவ‌தா சிரிப்ப‌தா என்று தெரிய‌வில்லை முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

இர‌ட்டைவேட‌ம் போடுவ‌தில் உல‌க‌த்தில் உங்க‌ளை விட‌ சிற‌ந்த‌ ந‌டிக‌ர் யாரும் கிடையாது என்ப‌தை ந‌டைமுறையில் உல‌குக்கு நீரூபித்துக்கொண்டுள்ள நீங்க‌ள் அடுத்த‌வ‌ர்க‌ளை இர‌ட்டைவேட‌ம் போடுவ‌தாக‌ச் சொல்லுவ‌து ம‌கா அயோக்கிய‌த்த‌ன‌மான‌து; ம‌ன‌ச்சாட்சி என்ப‌து கொஞ்ச‌ம் கூட‌ இல்லாம‌ல் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளை தேர்த‌ல் பாடுபொருளாக‌ எடுத்தாளும் உங்க‌ளை நாங்க‌ள் புழுவினும் கீழாக‌ ம‌திக்கிறோம். ஈழ‌த் த‌மிழ‌ர் பிர‌ச்னை அவ்வள‌வு கேவ‌லாமாக‌ப் போய்விட்ட‌து உங்க‌ளுக்கு!

allvoices

இலங்கை இரண்டாக உடைந்து விடும் : அமெரிக்கா எச்சரிக்கை

நியூயார்க். இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தாவிட்டால் அந்த நாடு இரண்டாக உடைந்துவிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும், தமிழர்களின் நிலைமை குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. மனிதநேய பிரிவு தலைவர் ஜான் ஹோம்ஸ், 3 நாள் பயணமாக கொழும்பு சென்றார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் தமிழர்கள் தப்பி வந்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், சில ஆயிரம் பேர் மட்டுமே அங்கு இருப்பதாக கூறி வருகிறது. ஆனால், போர் நடைபெறும் பகுதிக்குள் இன்னும் 50 ஆயிரம் பேர் இருப்பதாக ஐ.நா. சபை மதிப்பீடு செய்து உள்ளது.

allvoices

Friday, April 24, 2009

இலங்கை சித்திரவதை முகாம்களில் : 45 ஆயிரம் தமிழர்கள்?

கொழும்பு. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வளையத்தின் மீது நடத்திய கடும் தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் 56 ஆயிரம் தமிழர்கள் அங்கிருந்து இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே சுகாதார முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது. அவர்களை ராணுவ முகாம்களில் அடைத்து சித்ரவதை செய்வதாக பல மனித உரிமைகள் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

allvoices

ஈழத் தமிழர்களுக்கான குரல்கள் ( வீடியோ)

ஈழத் தமிழர்களுக்காக நடிகர் சத்யராஜ், கவிஞர் தாமரை, ஈழத்திலிருந்து ஒரு தமிழனின் அவலக் குரல்கள்

allvoices

இலங்கைக்கு வேண்டுகோள் - அமெரிக்கா ஏமாற்றம்

வாசிங்டன். போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற எங்களது வேண்டுகோளுக்கோ அல்லது உலகச் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கோ இலங்கை அரசு செவி சாய்க்க மறுப்பது குறித்து அமெரிக்க அரசு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. இலங்கை நிலைமை இடர் மிக்கதாக உள்ளது என்றும் அது கூறியுள்ளது.

அமெரிக்கா அரசின் வேண்டுகோளுக்கு மட்டுமின்றி, பரந்த பன்னாட்டுச் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கும் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் செவிசாய்க்க மறுக்கின்றன என்பதுதான் இப்போதுள்ள சிக்கல் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இராபர்ட் உட் கூறியுள்ளார்.

allvoices

Wednesday, April 22, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (8)

.."பொது வேலைநிறுத்தம் இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது"

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.

ஈழத்தமிழர் நலனுக்காக, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் கடந்தமாதம் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது .."பொது வேலைநிறுத்தம் என்பது இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது" என்று நீங்கள் சொன்னது உங்களுக்கே மறந்து அறிவித்திருக்கிறீர்கள்,முதல்வர் அவர்களே!

உங்களிடம் தொலைபேசி வசதியோ..அலைபேசி வசதியோ, தொலைநகல் வசதியோ.. மின்னஞ்சல் வசதியோ.. அட ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூட ஒரு கைத்தொலைபேசி வசதிகூட இல்லாத நிலையில்... இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லி இதுவரை மூன்று தந்திகளை அன்னை சோனியாவிற்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அனுப்பியுள்ளீர்க‌ள்.!

allvoices

இலங்கை பிரச்சனை தீராததற்கு காரணம் சுய நலமிக்க அரசியல்வதிகளே : வாழும்கலை ரவிசங்கர்

சென்னை. இலங்கை தமிழர் பிரச்சனை தீராததற்கு சுயநலம் கொண்ட அரசியல் வாதிகளே முழு முதல் காரணம் என்றும் இப்பிரச்சனையில் இந்தியா மிகபெரும் தவறு செய்துவிட்டது என்றும் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சுவாமிகள் கூறியுள்ளார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த நேருக்குநேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவிசங்கர் இலங்கையில் இருந்து தாம் நேராக இந்த பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு வந்துள்ளதாகவும், கடந்த 3 நாட்களாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்ததாகவும் கூறினார். தமிழ் அகதிகளில் பெரும்பான்மையோர் கடும மனநோய்க்கு ஆளாகி உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பான வாழ்விடங்களுக்கு செல்வேண்டும் என்ற ஆசையில் இருப்பதாகவும் கூறினார்.

allvoices

தமிழகத்தில் வேலைக்காக காத்திருப்போர் : 55 லட்சம்

சென்னை. அரசு வேலைக்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 55 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில், கடந்த ஜனவரி முதல் மாரச் 31 வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 81 ஆயிரத்து 66 பேர் புதிதாக பதிவு செய்துள்ளனர்.

allvoices

Tuesday, April 21, 2009

இலங்கை அப்பாவித் தமிழர்களின் அவலம் (வீடியோ)

இலங்கையில் நேற்றைய தாக்குதலி படுகாயமடைந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களின் அவலம் வீடியோவாக.

allvoices

Monday, April 20, 2009

அரசியல் லாபத்திற்காக சாணக்கியரானவர் கருணாநிதி - டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு, பிரபாகரன் தீவிரவாதி அல்ல என்று சொன்னதன் மூலம், அரசியல் லாபத்துக்காக சாணக்கியர் போல கருணாநிதி செயல்படுகிறார் என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

இதுகுறித்து டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது:-

allvoices

Sunday, April 19, 2009

6,000 ஆசிரியர் நியமனம்: தேர்தல் கமிஷன் தடை

சென்னை, இடைநிலை ஆசிரியர் களை நியமனம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கோரிக்கையை தலைமைத் தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது.

அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இடை நிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

allvoices

போர் முனையில் இருந்து 3000 ஈழ தமிழர்கள் முதல்வர் கருணாநிதி முயற்சியால் மீட்பு

சென்னை. இலங்கையில் போர் பகுதியில் சிக்கி தவித்த 3 ஆயிரம் ஈழத் தமிழர்கள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தனி நாடு கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போரில் இலங்கை ராணுவம் தினந்தோறும் குண்டுகளை வீசி அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.

allvoices

Saturday, April 18, 2009

திமுக - காங்கிரஸ் தேர்தல் கூட்டணி உறவை எவனும், விளக்கவோ, சிதைக்கவோ முடியாது - கருணாநிதி

சென்னை. திமுக - காங்கிரஸ் தேர்தல் கூட்டணி உறவை எவனும், விளக்கவோ, சிதைக்கவோ முடியாது என்றும், நாற்பது தொகுதிகளிலும், நாம் வெற்றி பெற வேண்டும் என்றும் திமுக தலைவரும், முதலமைச்சருமான, கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார துவக்க விழாவும், வேட்பாளர்களின் அறிமுக விழாவும், மத்திய சென்னை மக்களவை தொகுதி புரசைவாக்கத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் கல்வி அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டணி வேட்பாளர்களை வாழ்த்தி கூடியிருந்த தொண்டர்களிடையே கருணாநிதி பேசியதாவது:-

allvoices

இலங்கை படுகொலையை தடுக்க கோரி: 6-வது நாளாக பெண்கள் உண்ணாவிரதம்; - கண்டு கொள்ளாத அரசுகள்

சென்னை, இலங்கையில் போரை, சோனியாவே தடுத்து நிறுத்து என்ற ஒற்றை வரி கோஷத்துடன் சென்னையில் பெண்கள் குழு உண்ணாவிரத போராட்டத்தில் களம் இறங்கி உள்ளது.

ஈழத்தமிழ் இன அழிப்புக்கு எதிரான பெண்கள் அமைப்பு என்ற அமைப்பின் கீழ் 20 பெண்கள் கடந்த 13-ந்தேதி கொளத்தூரில் முத்துக்குமரன் வீடு அருகே உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் அதற்கு போலீஸ் அனுமதி மறுத்ததால் எழும்பூரில் ம.தி.மு.க. அலுவலக வாசலில் சாமியானா பந்தல் அமைத்து உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

allvoices

Friday, April 17, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (7)

திமுக‌வா? சோனியா திமுக‌வா?

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்.

"அ(றிக்கை)க்கப்போர் அறிக்கை மன்னன்"......"அறிக்கை கொண்டான்".....!"வெத்துவேட்டு அறிக்கையான்"..."காமெடி அறிக்கை கில்லாடி"....அடாடா என்ன‌ இதெல்லாம் என்று நீங்க‌ள் கோபமாகக் கேட்ப‌து என் காதும‌ட‌ல்க‌ளில் இடி ஓசையாக‌ விழுகிற‌து முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

நாளொருமேனியும் பொழுதொருவ‌ண்ண‌மாக‌ நீங்க‌ள் அறிக்கை என்ற‌ பெய‌ரில் அடிக்கும் லூட்டி தாங்காம‌ல் உங்க‌ளுக்கு ஒரு "க‌ல்ல‌க்குடி கொண்டான்" போல‌ ஒரு ப‌ட்ட‌த்தை வ‌ழ‌ங்கி க‌வுர‌விக்க‌லாமா? என்று பார்த்தேன். ஒரு ந‌ல்ல‌ பெய‌ர்கூட‌ கிடைக்க‌ மாட்டேன் என்கிற‌து.

allvoices

சுடிதார் அணிந்த நயன்தாராவிற்கு மடாதிபதி ஆதரவு

பாலக்காடு, கேரள மாநிலம் ஒற்றப்பாலம் அருகே உள்ள மனிசேரி என்ற இடத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட நடிகை நயன்தாரா சென்றார். அப்போது அவர் சுடிதார் அணிந்து இருந்தார். இந்த கோவிலுக்கு செல்லும் பெண்கள், சேலை தான் அணிந்து செல்ல வேண்டும் என்பது விதி.

allvoices

இயக்குநர் சீமான் மீதான தேசியபாதுகாப்பு சட்டம் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு

இயக்குநர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் படிக்க...

allvoices

Wednesday, April 15, 2009

தொல்.திருமாவளவன்:அரசியலில் வேதனை, விரக்தி

சென்னை, தேர்தல் அரசியல் என்னை மிகவும் சோர்வடையச் செய்கிறது. அதில் என்னால் தாக்கப் பிடிக்க முடியவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

அக்கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக் கூட்டம் பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திருமாவளவன் பேசியது.

சூது, சூழ்ச்சி, வஞ்சகம் நிறைந்த தேர்தல் அரசியல் களத்தில் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மனச் சோர்வின் விளிம்புக்கே சென்று திரும்புகிறேன்.

allvoices

இலங்கையில் பாதுகப்பான பகுதி தான் உலகிலேயே ஆபத்தான பகுதி - பிராட் ஆடம்ஸ்

நியூயார்க், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் இலங்கை பிரச்சனையில் தலையிட்டு அவசர நடவடிக்கை எடுத்து மனித உயிர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குனர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்தார்.

ஐ.நா. சிறப்புத் தூதர் இலங்கைக்கு அனுப்பி, சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கோரினார்.

allvoices

Tuesday, April 14, 2009

சிலை திருடர்களை தண்டித்த கடவுள்!

செம்பனார்கோயில், நாகை மாவட்டம் செம்பனார் கோயில் அருகே உள்ள பெருமாள் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி 6 சாமி சிலைகள் கொள்ளை போயின. இந்நிலையில், கொள்ளை போன சிலைகளில் நான்கினை செங்கல்பட்டு அருகே உள்ள ஏரியில் மீட்டனர்.

இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திண்டிவனம் அருகே 2 சிலைகளை நேற்று அதிகாலை மீட்டனர்.

allvoices

Monday, April 13, 2009

இலங்கைப் பிரச்சனை: மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் - லயோலா கல்லூரி கருத்துகணிப்பு

சென்னை, தமிழக மக்களவைத் தேர்தலில் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் தேர்தல் முடிவுகளை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்கும் என்று மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆய்வகம் சார்பில் லயோலா கல்லூரி முதுகலை ஊடகக்தலைத்துறை மாணவர்கள் சார்பில் பேராசிரியர் டாக்டர் ராஜநாயகம் தலைமையில் தேர்தல் காலங்களில் மாநில அளவிலான கள ஆய்வு கருத்து கணிப்புகள் நடத்தப்படுகின்றன.

ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை 39 தொகுதிகளிலும் தொகுதிக்கு 150 பேர் வீதம், மொத்தம் ஐந்து ஆயிரத்து 850 வாக்காளர்களிடம் கருத்துகள் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் குறித்து பேராசிரியர் ராஜநாயகம் நிருபர்களிடம் கூறியது.

allvoices

Sunday, April 12, 2009

கருணாநிதி நடத்திய பேரணியால் தான் ராஜபக்சே பணிந்தார் - சொல்கிறார் செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன்.

இலங்கையில் போரை நிறுத்தக்கோரி சென்னையில் கடந்த 10 ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழர் பேரணி ந்டைபெற்றது. இதன் காரணமாகதான் இலங்கை அரசு 2 நாள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளதாக இலங்கை தமிழர் தந்தை செல்வ நாயகத்தின் மகன் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

allvoices

இலங்கையில் 2 நாட்கள் போர் நிறுத்தம் - ராஜபக்சே அறிவிப்பு

கொழும்பு, போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக இலங்கை அரசு 2 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்தத்துக்கு விடுதலைப் புலிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என கூறப்படுகிறது.

allvoices

Saturday, April 11, 2009

வைகோ கைது செய்யப்படுவார், என்ற தகவலால் சென்னையில் பரபரப்பு

வைகோ கைது செய்யப்படுவார், என்ற தகவலால் சென்னையில் பரபரப்பு

allvoices

நடிகர் மீது முட்டை வீச்சு - ஆந்திராவில் பரபரப்பு

சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் மீது முட்டை வீச்சு - ஆந்திராவில் பரபரப்பு

சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் கர்னூலில் பிரஜா ராஜ்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது அவர் மீது செருப்பு, முட்டை வீசப்பட்டது.

ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. பிரஜா ராஜ்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் பிரசாரம் செய்து வருகிறார். மாநில இளைஞரணி தலைவரான இவர், மகபூப் நகர் மாவட்டம் நாகர் கர்னூல் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

allvoices

Friday, April 10, 2009

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் - ஜெ அதிரடி

சென்னை, அதிமுக சார்பில் பெரம்பலூர், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார்.

allvoices

விரைவில் மதிமுக சார்பில் வைகோ டிவி

சென்னை, ம.தி.மு.க.வின் பொதுக் குழு வைகோ தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. 1000-க்கும் மேற்பட்ட நிர் வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் வைகோ மதிமுகவிற் ஒரு டிவி ஆரம்பிக்க இருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

நமது இயக்கத்திற்காக ஒரு டி.வி. இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என்று வைகோ கூறியதும், தொண் டர்கள் கை தட்டி மகிழ்ச்சி தெரிவித்து வரவேற்றனர். நமது கட்சிக்கு என்று ஒரு டி.வி. வேண்டும் என் பது உங்களது நீண்ட கால கனவு. ஒவ்வொரு பொதுக் குழுவிலும் டி.வி. தொடங்க வேண்டும் என்று தொண்டர்கள் கருத்து கூறி னார்கள். அவர்களது ஆசை, எண்ணம் எல்லாம் இந்த ஆண்டு நிறைவேற போகிறது என்று வைகோ கூறினார்.

allvoices

சீக்கியர்களுக்கு நியாயம் வழங்கிய சோனியா காங்கிரசே, எங்கள் சகோதரர்களுக்கு நீதி எப்போது ?

1984 முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி சுட்டு கொல்லபட்டார். அவரை சுட்டு கொன்றவர் அவரது பாதுகாவலர்களான சீக்கியர் இருவர். ஏன் சுட்டு கொன்றனர் சீக்கியர்களின் புனித ஸ்தலம் அவர்களின் தலைமை புனிதஸ்தலம் உலகத்தின் ராஜா வந்தாலும் பாதங்களை கழுவாமல் உள்ளே செல்ல அனுமதி இல்லை, இதற்காகவென்றே தனியாக பொற்றாமரை குளம் ஒன்று கட்டி வைத்தனர். உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும் அசுத்தம் இன்றி செல் , பசி இன்றி செல் என்று சொல்வது போல் இலவச உணவு, தியானம் போன்றவற்றை செய்து விட்டு தங்களது புனித கோவிலுக்குள் செல்வர் சீக்கியர்கள். ஆனால் அந்த புனித கோவிலில் ஆயுதம் ஏந்திய ராணுவம் நுழைந்தது.

allvoices

புலி ஆதரவுப் பேச்சு - வைகோ மீது நடவடிக்கை இல்லை தேர்தல் கமிஷன்

சென்னை, இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று முன்தினம் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசிய போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று கூறினார்.

வைகோவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியது தவறு என்று புகார் கூறப்பட்டது. வைகோவின் பேச்சை வடக்கு கடற்கரை போலீசார் வீடியோவில் பதிவு செய்திருந்தனர்.

allvoices

Thursday, April 9, 2009

இறுதிப் போருக்கு புலிகள் தயார்!

கொழும்பு, இலங்கையில் இராணுவத்திற்கும் விடுதப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. விடுதலைப்புலிகள் வசம் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியையும் இராணுவத்தினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இராணுவத் தகவலின் படி இன்னும் விடுதலைப் புலிகள் வசம் 20 கி.மீ சதுரப் பரப்பளவு மட்டுமே உள்ளது. இந்த பகுதிகளையும் கைப்பற்றுவதற்காக இராணுவத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர்.இந்த பகுதிகளை காப்பற்றி கொள்ள விடுதலைப் புலிகளும் கடுமையான எதிர்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

allvoices

பிரபாகரன் உடல் நிலை பாதிப்பு, பொட்டு அம்மன் தலைவரானார் - இலங்கை இராணுவம் தகவல்

கொழும்பு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் புலிகளின் தலைவராக பொட்டு அம்மன் பொறுப்பேற்றுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே புலிகள் சரண் அடைந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என ராஜபக்சே அறிவித்துள்ளார்.

இலங்கையில் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே போர் தீவிரம் அடைந்தது. கிளிநொச்சி மற்றும் யானையிறவு பகுதிகளை இராணுவம் கைப்பற்றி முன்னேறி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு புலிகள் வசம் இருந்த புதுகுடியிருப்பு பகுதியை கைப்பற்றி விட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. பாதுகப்பு வலையப் பகுதியில் புலிகளின் முக்கியத் தலைவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

allvoices

சோனியாவிற்கு எங்களால் எந்த ஆபத்தும் வராது - விடுதலைப்புலிகள்

Thursday, April 09, 2009 10:05 AM
இலங்கையில் போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்தும், உலகத் தமிழர்களிடம் இருந்தும் மீண்டும், மீண்டும் கோரிக்கைகள் வந்த போதிலும் சோனியா மவுனமாக உள்ளார்.

ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க சோனியா எந்த ஒரு முயற்சியும் எடுக்காதது விடுதலைப்புலி தலைவர்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்தது.

இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்
Thursday, April 09, 2009 9:59 AM

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், ஈரோடு, தஞ்சை, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அண்ணாநகர் நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய்ஸ்ரீ மகாலில் இன்று நடந்தது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். பொருளாளர் மாசிலாமணி, துணைப் பொதுச்செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை பால கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், மணி மாறன், தாமரைக்கண்ணன் மற்றும் ஆட்சிமன்ற உறுப்பி னர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
Thursday, April 09, 2009 9:18 AM

சென்னை, தமிழக மக்களவைத் தேர்தலில் அண்ணா திமுக சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வருமாறு:-

இலங்கையில் சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது இராணுவம் தாக்குதல்: 40 பொதுமக்கள் படுகொலை;
Wednesday, April 08, 2009 5:22 PM

வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதி என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பொக்கணை பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம், பால்மா விநியோக நிலையம் ஆகியவற்றின் மீது இன்று இலங்கை இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 சிறுவர்கள் உட்பட 258 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு இழப்பு
Wednesday, April 08, 2009 5:18 PM

மும்பை, வங்கிகள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மியூச்சுவல் பண்டு முதலீடுகளை திரும்பப் பெற்றதால் மியூச்சுவல் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஷூ வீசிய நிருபருக்கு சீட் - அகாலிதளம் அறிவிப்பு
Wednesday, April 08, 2009 5:00 PM

1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையான சமயத்தில் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் சமீபத்தில் இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தைனிக் ஜார்கன் பத்திரிக்கை நிருபர் ஜர்னைல் சிங், சிதம்பரம் மீது தனது ஷூவை கழற்சி வீசினார்.

பஞ்சாப், வெடித்தது சீக்கியர்கள் போராட்டம்
Wednesday, April 08, 2009 4:54 PM

சண்டிகர்: சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லர் நிரபராதி என அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து பஞ்சாப் முழுவதும் சீக்கியர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது.

அதிமுக கூட்டணி ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள்; இன்று உடன்பாடு
Wednesday, April 08, 2009 4:48 PM

சென்னை, அ.தி.மு.க. கூட்டணி யில் இடம் பெற்றுள்ள பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. பா.ம.க. 7 தொகுதியிலும், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பா.ம.க.வும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.

ம.தி.மு.க.வுக்கு தொகுதி கள் ஒதுக்குவது தொடர்பாக 4 கட்ட பேச்சு நடந்த பிறகும் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டது. ம.தி.மு.க. 5 தொகுதிகள் கேட்டது. அ.தி.மு.க. தரப்பில் 3 தொகுதிகளே ஒதுக்க முன் வந்தது. இதை ம.தி.மு.க. ஏற்க மறுத்ததால் பேச்சு வார்த்தை நீடித்தது. இதனால் ம.தி.மு.க.வினர் அதிருப்தியில் இருந்தனர்.

பிரபாகரன் மீது துரும்பு விழுந்தால் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்: வைகோ
Wednesday, April 08, 2009 4:40 PM

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதுடன் விடுதலைப் புலிகளை எவரும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.

உலகத் தமிழர்களிடம் கலைஞர் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்: இராமதாஸ்
Wednesday, April 08, 2009 4:37 PM

உலகத் தமிழர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது : விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு
Wednesday, April 08, 2009 4:00 PM

கடந்த வாரம் இராணுவத்தினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, இரசாயன ஆயுதங்களை பாவித்துள்ளனர் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் தளபதியான லாரன்ஸ் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன் போட்டி
Wednesday, April 08, 2009 3:53 PM

சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக தொழில் அதிபர் மடிப்பாக்கம் வேலாயுதமும், சிதம்பரம் தொகுதியின் வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் பணி ஏப்.15 ல் துவக்கம்
Wednesday, April 08, 2009 3:25 PM

சென்னை, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வுத் தாள்கள் திருத்தும் பணி வரும் 15-ம் தேதி துவங்குகிறது.

புதுச்சேரி அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை பாமக வாபஸ் பெற்றது
Wednesday, April 08, 2009 3:24 PM

புதுச்சேரி, புதுச்சேரி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சி வாபஸ் பெற்றுள்ளது.

கூட்டணி குறித்து பேச மதிமுக விலிருந்து யாரும் வரவில்லை - இல.கணேசன்
Wednesday, April 08, 2009 3:35 AM

சென்னை, பாரதீய ஜனதா கட்சித்தலைவர் இல.கணேசன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சோனியா காந்தியை போலவே ராகுல்காந்தியும் வேட்புமனுவில் தன்னுடைய கல்வி பற்றி தவறான தகவல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? வருண்காந்திக்கு ஒரு நியாயம்? ராகுல்காந்திக்கு ஒரு நியாயமா?

லாலுபிரசாத் யாதவ், ஒரு குறிப்பிட்ட நபரை ரோடுரோலரை ஏற்றி நசுக்கி கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். கொடூரமான வாசகங்களை உதிர்த்திருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.

இலங்கையில் போர் நிறுத்த கோரி - பிரதமருக்கு கருணாநிதி தந்தி
Wednesday, April 08, 2009 3:32 AM

சென்னை, இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அப்பாவி தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய இலங்கை ராணுவம் தற்போது புதுக்குடியிருப்பு பகுதியில் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

இலங்கை இராணுவத்தில் இந்திய இராணுவ வீரர்கள்?
Tuesday, April 07, 2009 5:03 PM

இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களின் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் இந்திய அரசாங்கமே பொறுப்பு – வை. கோ
Tuesday, April 07, 2009 4:46 PM

இலங்கை இராணுவத்தினர் புதுக்குடியிருப்பை கைப்பற்றியதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தமது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்ககழகம் நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த போராட்டத்தின் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றினை அறிவிக்கை வேண்டும் என அவர்கள் வலியுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேச ஜனாதிபதி சுற்றுப்பயணத்திற்கு சீனா எதிர்ப்பு
Tuesday, April 07, 2009 4:41 PM

ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் அருணாசல பிரதேச சுற்றுப்பயணத்துக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் சீனாவை ஒட்டியுள்ள அருணாசலபிரதேசத்துக்கு வெகுநாட்களாகவே சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அருணாசல் சென்ற போதும் ஆட்சேபணை தெரிவித்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.

இத்தாலி பூகம்பம் 150 க்கு மேற்பட்டோர் பலி
Tuesday, April 07, 2009 4:40 PM

இத்தாலியின் அப்ரூசோ மாநிலத்தில் 26 நகரங்களில் நேற்று அதிகாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 15 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தலைநகர் அக்யூல்லாவில் பள்ளி மாணவர் விடுதி ஒன்றும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாயினர். மீட்பு பணிகள் நேற்று உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 150க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கருதப்படுகிறது. காயம் அடைந்த 1500 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.

மும்பை, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் மயக்க மருந்து கொடுத்து பயணிகளிடம் கொள்ளை
Tuesday, April 07, 2009 4:36 PM

சேலம், மும்பையில் இருந்து கோவை வரும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்று பயணிகள் மயங்கி கிடந்தனர். இவர்களுக்கு கொள்ளை கும்பல் மயக்க மருந்து கொடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மும்பையிலிருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட குர்லா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு 9.30 மணியளவில் பெங்களூர் வந்தது. அப்போது மூன்றடுக்கு ஏசி பெட்டியில் மூன்று பயணிகள் மயங்கி கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் இதுகுறித்து விசாரிப்பதற்குள், பெங்களூரில் இருந்து ரயில் புறப்பட்டு விட்டது. இதுகுறித்து பெங்களூர் ரயில்வே போலீசார், சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
Tuesday, April 07, 2009 4:32 PM

தமிழகத்தில் மே 13ம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 17ம் தேதி துவங்குகிறது. தேர்தலுக்காக ஒவ்வொரு கட்டமாக பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி அளித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் 32 மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) மற்றும் தாசில்தார் களுக்கு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கவும், பயிற்சி அளிக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஏற்பாடு செய்துள்ளார்.

எந்த எந்த ஆவணங்களை காட்டி ஓட்டு போடுவது? தேர்தல் ஆணையம் பட்டியல்
Tuesday, April 07, 2009 4:16 PM

புதுடெல்லி, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதற்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய 13 ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், ரேஷன் அட்டை இடம் பெறவில்லை.

மக்களவைக்கு வரும் 16ம் தேதி முதல் மே 13 வரை ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு முறையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
Tuesday, April 07, 2009 4:11 PM

சென்னை, அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு முறையை எதிர்த்து ஐகோட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கோவை பொறியியல் கல்லூரிகள் நிர்வாக சங்கத்தின் தலைவர் சுதானந்தன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:

அதிமுக,மதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி:
Tuesday, April 07, 2009 4:08 PM

சென்னை, அதிமுக கூட்டணியில் மதிமுகவுடன் மட்டும் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து இன்றும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மார்¢க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் புதிதாக சேர்ந்த பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்கள் தரப்பட்டது. மார்க்சிஸ்ட்டுக்கும் மதிமுகவுக்கும்தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததாலும் கூடுதல் தொகுதிகள் கேட்டதாலும் இந்த சிக்கல் தொடர்ந்தது.

allvoices

Wednesday, April 8, 2009

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு இழப்பு

ங்கமம் இன்றைய செய்திகள்

இலங்கையில் சிறுவர் பராமரிப்பு ...
Wednesday, April 08, 2009 5:22 PM

வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதி என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பொக்கணை பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம், பால்மா விநியோக நிலையம் ஆகியவற்றின் மீது இன்று இலங்கை இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 சிறுவர்கள் உட்பட 258 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ...
Wednesday, April 08, 2009 5:18 PM

மும்பை, வங்கிகள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மியூச்சுவல் பண்டு முதலீடுகளை திரும்பப் பெற்றதால் மியூச்சுவல் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஷூ வீசிய நிருபருக்கு சீட் - ...
Wednesday, April 08, 2009 5:00 PM

1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையான சமயத்தில் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் சமீபத்தில் இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தைனிக் ஜார்கன் பத்திரிக்கை நிருபர் ஜர்னைல் சிங், சிதம்பரம் மீது தனது ஷூவை கழற்சி வீசினார்.

பஞ்சாப், வெடித்தது சீக்கியர்கள் ...
Wednesday, April 08, 2009 4:54 PM

சண்டிகர்: சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லர் நிரபராதி என அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து பஞ்சாப் முழுவதும் சீக்கியர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது.

அதிமுக கூட்டணி ம.தி.மு.க. ...
Wednesday, April 08, 2009 4:48 PM

சென்னை, அ.தி.மு.க. கூட்டணி யில் இடம் பெற்றுள்ள பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. பா.ம.க. 7 தொகுதியிலும், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பா.ம.க.வும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.

ம.தி.மு.க.வுக்கு தொகுதி கள் ஒதுக்குவது தொடர்பாக 4 கட்ட பேச்சு நடந்த பிறகும் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டது. ம.தி.மு.க. 5 தொகுதிகள் கேட்டது. அ.தி.மு.க. தரப்பில் 3 தொகுதிகளே ஒதுக்க முன் வந்தது. இதை ம.தி.மு.க. ஏற்க மறுத்ததால் பேச்சு வார்த்தை நீடித்தது. இதனால் ம.தி.மு.க.வினர் அதிருப்தியில் இருந்தனர்.

பிரபாகரன் மீது துரும்பு ...
Wednesday, April 08, 2009 4:40 PM

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதுடன் விடுதலைப் புலிகளை எவரும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.

உலகத் தமிழர்களிடம் கலைஞர் ...
Wednesday, April 08, 2009 4:37 PM

உலகத் தமிழர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை ...
Wednesday, April 08, 2009 4:00 PM

கடந்த வாரம் இராணுவத்தினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, இரசாயன ஆயுதங்களை பாவித்துள்ளனர் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் தளபதியான லாரன்ஸ் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

சிதம்பரம் தொகுதியில் தொல். ...
Wednesday, April 08, 2009 3:53 PM

சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக தொழில் அதிபர் மடிப்பாக்கம் வேலாயுதமும், சிதம்பரம் தொகுதியின் வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்வுத்தாள் ...
Wednesday, April 08, 2009 3:25 PM

சென்னை, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வுத் தாள்கள் திருத்தும் பணி வரும் 15-ம் தேதி துவங்குகிறது.

புதுச்சேரி அரசுக்கு அளித்து வந்த ...
Wednesday, April 08, 2009 3:24 PM

புதுச்சேரி, புதுச்சேரி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சி வாபஸ் பெற்றுள்ளது.

கூட்டணி குறித்து பேச மதிமுக ...
Wednesday, April 08, 2009 3:35 AM

சென்னை, பாரதீய ஜனதா கட்சித்தலைவர் இல.கணேசன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சோனியா காந்தியை போலவே ராகுல்காந்தியும் வேட்புமனுவில் தன்னுடைய கல்வி பற்றி தவறான தகவல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? வருண்காந்திக்கு ஒரு நியாயம்? ராகுல்காந்திக்கு ஒரு நியாயமா?

லாலுபிரசாத் யாதவ், ஒரு குறிப்பிட்ட நபரை ரோடுரோலரை ஏற்றி நசுக்கி கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். கொடூரமான வாசகங்களை உதிர்த்திருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.

இலங்கையில் போர் நிறுத்த கோரி - ...
Wednesday, April 08, 2009 3:32 AM

சென்னை, இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அப்பாவி தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய இலங்கை ராணுவம் தற்போது புதுக்குடியிருப்பு பகுதியில் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

இலங்கை இராணுவத்தில் இந்திய இராணுவ ...
Tuesday, April 07, 2009 5:03 PM

இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களின் ஒவ்வொரு துளி ...
Tuesday, April 07, 2009 4:46 PM

இலங்கை இராணுவத்தினர் புதுக்குடியிருப்பை கைப்பற்றியதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தமது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்ககழகம் நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த போராட்டத்தின் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றினை அறிவிக்கை வேண்டும் என அவர்கள் வலியுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேச ஜனாதிபதி ...
Tuesday, April 07, 2009 4:41 PM

ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் அருணாசல பிரதேச சுற்றுப்பயணத்துக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் சீனாவை ஒட்டியுள்ள அருணாசலபிரதேசத்துக்கு வெகுநாட்களாகவே சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அருணாசல் சென்ற போதும் ஆட்சேபணை தெரிவித்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.

இத்தாலி பூகம்பம் 150 க்கு ...
Tuesday, April 07, 2009 4:40 PM

இத்தாலியின் அப்ரூசோ மாநிலத்தில் 26 நகரங்களில் நேற்று அதிகாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 15 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தலைநகர் அக்யூல்லாவில் பள்ளி மாணவர் விடுதி ஒன்றும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாயினர். மீட்பு பணிகள் நேற்று உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 150க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கருதப்படுகிறது. காயம் அடைந்த 1500 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.

மும்பை, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ...
Tuesday, April 07, 2009 4:36 PM

சேலம், மும்பையில் இருந்து கோவை வரும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்று பயணிகள் மயங்கி கிடந்தனர். இவர்களுக்கு கொள்ளை கும்பல் மயக்க மருந்து கொடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மும்பையிலிருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட குர்லா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு 9.30 மணியளவில் பெங்களூர் வந்தது. அப்போது மூன்றடுக்கு ஏசி பெட்டியில் மூன்று பயணிகள் மயங்கி கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் இதுகுறித்து விசாரிப்பதற்குள், பெங்களூரில் இருந்து ரயில் புறப்பட்டு விட்டது. இதுகுறித்து பெங்களூர் ரயில்வே போலீசார், சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை ...
Tuesday, April 07, 2009 4:32 PM

தமிழகத்தில் மே 13ம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 17ம் தேதி துவங்குகிறது. தேர்தலுக்காக ஒவ்வொரு கட்டமாக பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி அளித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் 32 மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) மற்றும் தாசில்தார் களுக்கு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கவும், பயிற்சி அளிக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஏற்பாடு செய்துள்ளார்.

எந்த எந்த ஆவணங்களை காட்டி ஓட்டு ...
Tuesday, April 07, 2009 4:16 PM

புதுடெல்லி, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதற்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய 13 ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், ரேஷன் அட்டை இடம் பெறவில்லை.

மக்களவைக்கு வரும் 16ம் தேதி முதல் மே 13 வரை ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு ...
Tuesday, April 07, 2009 4:11 PM

சென்னை, அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு முறையை எதிர்த்து ஐகோட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கோவை பொறியியல் கல்லூரிகள் நிர்வாக சங்கத்தின் தலைவர் சுதானந்தன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:

அதிமுக,மதிமுக தொகுதி பங்கீட்டில் ...
Tuesday, April 07, 2009 4:08 PM

சென்னை, அதிமுக கூட்டணியில் மதிமுகவுடன் மட்டும் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து இன்றும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மார்¢க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் புதிதாக சேர்ந்த பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்கள் தரப்பட்டது. மார்க்சிஸ்ட்டுக்கும் மதிமுகவுக்கும்தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததாலும் கூடுதல் தொகுதிகள் கேட்டதாலும் இந்த சிக்கல் தொடர்ந்தது.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஜெர்மன் ...
Tuesday, April 07, 2009 4:01 PM

சோமாலிய கடற்கொள்ளையர்கள் 22,000 டன் எடை கொண்ட ஜெர்மன் நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை இந்திய பெருங்கடல் பகுதியில் கடத்தியுள்ளனர்.

கென்யாவுக்கும் ஷெஷல்ஸ்க்கும் இடைப்பட்ட இடத்தில், சோமாலிய கடற்கரையில் இருந்து சுமார் 400 கடல் மைல்களுக்கு அப்பால் இந்த கப்பலை இவர்கள் பிடித்துள்ளனர்.

வருண்காந்தியை தாக்கி பேசிய லாலு ...
Tuesday, April 07, 2009 3:38 PM

பாட்னா, வருண்காந்தியை தாக்கிய பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் கிருஷணன்கஞ்சில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், Ôநான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய வருண்காந்தியை ரோடு ரோலர் ஏற்றி நசுக்கியிருப்பேன்Õ என்றார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

நியூசிலாந்தில், 41 ஆண்டுக்கு பின் ...
Tuesday, April 07, 2009 3:11 PM

வெலிங்டன், நியூசிலாந்து மண்ணில் 41 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்தது. வெலிங்டனில் நடந்த கடைசி போட்டியில் இந்தியாவின் வெற்றியை மழை தட்டிப் பறித்தது.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து இரு அணிகளும் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் மோதின. ஹாமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. நேப்பியரில் நடந்த 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

allvoices

Tuesday, April 7, 2009

இலங்கை இராணுவத்தில் இந்திய இராணுவ வீரர்கள்?

இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பயன்படுத்தியிராத நவீன ஆயுதங்களையும் அது பயன்படுத்தி வருகிறது.

allvoices

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்!

வணக்கம்.

பாராட்டுக்கள், முதல்வர் அவர்களே!

மீண்டும் ஒருமுறை தலைக்குமேல் தேர்தல் வேலை இருந்தாலும்,"இலங்கையில் போர் நிறுத்தம் செய்யாததற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததற்குத்தான்!

என்னிடமிருந்து பாராட்டுக் கிடைத்ததே என்று மிகவும் புல்லரித்துப் புளகாங்கிதப்பட்டு விடாதீர்கள்! ஒரு செய்தியாளர் கேட்டு நினைவூட்டப்போய் வேறு வழியில்லாமற் சொல்லி இருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் நகைப்புகிடமான பதில்கள் சகிக்கவில்லை முதல்வர் அவர்களே!

allvoices

மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது ஷூ வீச்சு - வீடியோ

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசினார்.

இந்திரா காந்தி மறைவின்போது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார்.

allvoices

Monday, April 6, 2009

புதுக்குடியிருப்பு மோதலில் இலங்கை ராணுவம் நச்சுவாயு பயன்படுத்தியது அம்பலம்

விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் இலங்கை இராணுவம் கூறியிருந்தது . ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல் நடத்தியதால்.

இராணுவத்திற்கு பெருமளவிலான இழப்புக்கள் ஏற்பட்டது. இந்நேரத்த்தில் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் நச்சுக் குண்டு வீசப்பட்டுள்ளது.

allvoices

இலங்கைக்கு ரூ.5,800 கோடி கடன், இந்தியா வழங்குகின்றது

கொழும்பு, இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக அந்நாட்டிற்கு 5,800 கோடி ரூபாய் அவசரக் கடன் வழங்க இந்தியாவும், சீனாவும் முன் வந்திருக்கின்றன. பன்னாட்டு நிதியத்தின் சார்பில் இலங்கைக்கு வழங்கப்பட இருந்த சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி மேலும் சில மாதங்கள் தாமதமாகும் என்பதால், உடனடித் தேவைகளைச் சமாளிப்பதற்காக இலங்கைக்கு இந்தியாவும், சீனாவும் இந்தக் கடனை வழங்குகின்றன.

allvoices

Friday, April 3, 2009

சென்னை செய்திகள்

சென்னை செய்திகள்

allvoices

Thursday, April 2, 2009

வணங்கா மண்ணைத் தடுக்க உஷார் நிலையில் இலங்கை கடற்படை

வன்னியில் தொடரும் போராலும் பொருளாதாரத் தடைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய நாடுகளில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் வணங்கா மண் என்ற கப்பல் வன்னி நோக்கிப் புறப்படத் தயாராகியுள்ள அதேவேளையில், இந்தக் கப்பலைத் தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை தனது கடற்படையை உஷார் நிலையில் வைத்துள்ளது.

வன்னியில் போரின் கொடுமையாலும் பட்டிணியாலும் வாடிக்கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு உதவவேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்தே உணவு மற்றும் அத்தியவாசிய மருந்துப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகளில் சேகரிக்கப்பட்டன.

allvoices

Wednesday, April 1, 2009

இலங்கை, போரில் பிரபாகரன் மகன் சார்லஸ் காயம் ?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி வெளிநாடு சென்று படித்தவர். தற்போது அவர் புதுக்குடியிருப்பு போர் களத்தில் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போர் செய்து வருகிறார்.

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளான பானு மற்றும் லட்சுமணன் ஆகியோருடன் சேர்ந்து போர் வியூகங்களை அமைத்து சார்லஸ்தான் போரை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

allvoices

நீர்த்துப்போன ஈழப்பிரச்னை‍ ஓர் அலசல்

நியாயமான போராட்டங்களை கலவரமாக மாற்றி நீர்த்துப்போகச் செய்தல்,போராடுபவர்களின் பக்கமே பிரச்னையை திசைதிருப்பிவிட்டு போராடுபவர்களை குற்றவாளிகூண்டில் ஏற்றிவிடுவது; முதலில் அதிலிருந்து அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிவிடுவது; அவர்கள் எதற்காக தொடங்கினார்களோ அந்தப் புள்ளியை விட்டு அவர்களை வெகுதூரத்திற்கு கடத்திச்சென்று மறக்கடித்து,மழுங்கடித்துவிடுவது; அதன் பின் அவர்களின் மீதே தவறென்று மீண்டும் மீண்டும் கொளுத்திவிட்டு குளிர்காயும் உத்தியைக் கையாண்டு, பாதிக்கப்படுபவர்களை விட மேலதிக மன உளைச்சளை பாதிக்கப்படுவோருக்காக போராடுபவர்கள்மீது திணித்து தான் எப்போதும் பேரினவாதத்தின் தோழன்தான் என்பதை ஆளும் அதிகாரவர்க்கம் உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது.

allvoices
Related Posts with Thumbnails