SANGAMAM - LIVE NEWS

Thursday, April 2, 2009

வணங்கா மண்ணைத் தடுக்க உஷார் நிலையில் இலங்கை கடற்படை

வன்னியில் தொடரும் போராலும் பொருளாதாரத் தடைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய நாடுகளில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் வணங்கா மண் என்ற கப்பல் வன்னி நோக்கிப் புறப்படத் தயாராகியுள்ள அதேவேளையில், இந்தக் கப்பலைத் தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை தனது கடற்படையை உஷார் நிலையில் வைத்துள்ளது.

வன்னியில் போரின் கொடுமையாலும் பட்டிணியாலும் வாடிக்கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு உதவவேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்தே உணவு மற்றும் அத்தியவாசிய மருந்துப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகளில் சேகரிக்கப்பட்டன.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails