சென்னை. இலங்கை தமிழர் பிரச்சனை தீராததற்கு சுயநலம் கொண்ட அரசியல் வாதிகளே முழு முதல் காரணம் என்றும் இப்பிரச்சனையில் இந்தியா மிகபெரும் தவறு செய்துவிட்டது என்றும் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சுவாமிகள் கூறியுள்ளார்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த நேருக்குநேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவிசங்கர் இலங்கையில் இருந்து தாம் நேராக இந்த பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு வந்துள்ளதாகவும், கடந்த 3 நாட்களாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்ததாகவும் கூறினார். தமிழ் அகதிகளில் பெரும்பான்மையோர் கடும மனநோய்க்கு ஆளாகி உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பான வாழ்விடங்களுக்கு செல்வேண்டும் என்ற ஆசையில் இருப்பதாகவும் கூறினார்.

No comments:
Post a Comment