SANGAMAM - LIVE NEWS

Friday, April 24, 2009

இலங்கை சித்திரவதை முகாம்களில் : 45 ஆயிரம் தமிழர்கள்?

கொழும்பு. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வளையத்தின் மீது நடத்திய கடும் தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் 56 ஆயிரம் தமிழர்கள் அங்கிருந்து இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே சுகாதார முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது. அவர்களை ராணுவ முகாம்களில் அடைத்து சித்ரவதை செய்வதாக பல மனித உரிமைகள் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails