SANGAMAM - LIVE NEWS

Friday, March 27, 2009

தமிழ் இலம்பாடிகள்! - நாக.இளங்கோவன்

ஈழத்தமிழர்கள் இன்றைக்கு உலகிலே படுகின்ற துயர் ஒட்டு மொத்த தமிழினத்தை அதிர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் வாழ்கின்ற தமிழர்களை பெரும் சிந்தனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. தமிழீழம் என்ற நிலையைத் தாண்டி இந்திய வாழ் தமிழர்களின் எதிர்காலத்தைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

தமிழ் மொழி, இனம், வாழ்வியல், உரிமை என்ற எல்லாமே இன்று கேலிக்கும் தாழ்வுக்கும் உள்ளாகியிருக்கின்றன.திட்டமிட்ட தன்னல அரசியல் சதிகளும்,கூடவே இருந்து குழிபறிக்கும் கூட்டமும் தமிழ் மக்களை அப்படியே மாயைக்குள் மூடியிருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் மானமும் உணர்வும் மயிரினும் சிறிதென மதிக்கப் படுகின்றன.

தமிழர்களின் மானத்தையும் உணர்வையும் தமிழர்களே முன்னின்று களையும் ஒரு அவல நிலை தமிழகத்தைப் பற்றியிருக்கின்றது. தமிழீழத்தில் கொட்டுகின்ற ஒவ்வொரு துளிக் குருதியும் தமிழ் நாட்டுத் தமிழனுக்கு ஒவ்வொரு பாடத்தைச் சொல்லித் தருகிறது. இழந்து போன மதியைக் கூர்ப்பாக்குகிறது.

தமிழ்நாட்டில் விளைந்திருக்கிற கேடுகளைக் களைய நீண்டகாலச் சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் விதைத்து "தமிழை" மீள உருவாக்குவதே இன்றைக்கு நாம் முன்னெடுக்க வேண்டிய தேவையாகும். அவசர கோலத்தில் உடனடியாகச் செய்ய நினைக்கும் எதுவும் பயன் தராது.



allvoices

Thursday, March 26, 2009

தொண்டர்கள் தீர்ப்பே தலைமையின் தீர்ப்பு - ராமதாஸ்

இன்று சென்னையில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

தொண்டர்கள் தீர்ப்பே தலைமையின் தீர்ப்பு. ஜனநாயக முறைப்படி உங்கள் கருத்துக்களை கேட்டோம். பா.ம.க.வில் ஒவ்வொரு தொண்டனும் மனதளவில் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளால் காயப்பட்டுள்ளனர்.

அதன் வெளிப்பாடுதான் இந்த முடிவு. வேறு எந்த கட்சி தொண்டர்களைப் பார்த்தாலும் எங்கள் கட்சி தொண்டர்கள் வணக்கம் சொல்வார்கள். அந்த நிலை இன்று தி.மு.க., மற்றும் பா.ம.க. தொண்டர்களிடம் இல்லை.


2004-ல் தோழமை உணர்வுடன் 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். அப்போது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நான் சொன்னேன். ஆனால் கலைஞர், 34 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார்.


allvoices

தொண்டர்கள் தீர்ப்பே தலைமையின் தீர்ப்பு - ராமதாஸ்

இன்று சென்னையில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

தொண்டர்கள் தீர்ப்பே தலைமையின் தீர்ப்பு. ஜனநாயக முறைப்படி உங்கள் கருத்துக்களை கேட்டோம். பா.ம.க.வில் ஒவ்வொரு தொண்டனும் மனதளவில் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளால் காயப்பட்டுள்ளனர்.

அதன் வெளிப்பாடுதான் இந்த முடிவு. வேறு எந்த கட்சி தொண்டர்களைப் பார்த்தாலும் எங்கள் கட்சி தொண்டர்கள் வணக்கம் சொல்வார்கள். அந்த நிலை இன்று தி.மு.க., மற்றும் பா.ம.க. தொண்டர்களிடம் இல்லை.

2004-ல் தோழமை உணர்வுடன் 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். அப்போது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நான் சொன்னேன். ஆனால் கலைஞர், 34 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார்.


allvoices

அதிமுகவுடன் கூட்டணி - பாமக பொதுக்குழுவில் முடிவு

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ம.க. பொதுக்குழுவை கூட்டி அதில் ஓட்டெடுப்பு நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

சென்னையில் பா.ம.க. பொதுக்குழு இன்று காலை கூடியது.

கூட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மத்திய மந்திரிகள் அன்புமணி, வேலு, மாநில நிர்வாக குழு உறுப்பினர் காடுவெட்டி குரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



allvoices

நடிகை அசின் உதவியாளர் இருக்குமிடம் தெரிந்தது

நடிகை அசினிடம் உதவியாளராக இருந்த முத்துக்குமார் திடீரென்று மாயமானார். இது குறித்து முத்துக்குமாரின் தாய் சுடலைவடிவு போலீசில் பரபரப்பான புகார் அளித்தார்.

இந்திப்படத்தில் நடிக்க அசின் மும்பை சென்றபோது முத்துக்குமாரும் கூடவே சென்றார். பின்னர் அவரிடம் இருந்து சுடலை வடிவுக்கு தகவல் ஏதும் வரவில்லை. எனவே மகனை நேரில் சந்திக்க சுடலை வடிவு மும்பை சென்றார். முத்துக்குமார் வேலையில் இருந்து நின்று விட்டதாக அசின் தந்தை அவரை திருப்பி அனுப்பினார். அதன் பிறகே போலீசில் சுடலை வடிவு புகார் செய்தார்.

இதனை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் காணாமல் போன முத்துக்குமார் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.



allvoices

Wednesday, March 25, 2009

உங்கள் வாக்கு யாருக்கு?

அன்பான வாசகர்களே உங்களது மதிப்புமிக்க வாக்கு யாருக்கு?
உங்களது வாக்கினை கீழ்கண்ட இணைப்பின் மூலம் வழங்குங்கள்.


allvoices

தமிழர்கள் நலனை கைகழுவியது யார்? - கருணாநிதிக்கு ராமதாஸ் கேள்வி

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:-

விரக்தியின் விளிம்பிற்கும், கோபத்தின் உச்சிக்கும் சென்றுவிட்டால், ஒருவர் எப்படியெல்லாம் பேசுவார், எழுதுவார் என்பதற்கு முதலமைச்சர் கலைஞரின் " கள்ளத் தோணி" கருத்து சிறந்த எடுத்துக்காட்டக அமைந்திருக்கிறது. நாளைக்கே தோணிகளைத் தயார் செய்யட்டும்; அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை; அவற்றில் படைகளை ஏற்றிச்செல்லட்டும், இராணுவ அணிவகுப்பு நடத்தட்டும்; யார் குறுக்கே நிற்கிறார்கள்; நாங்கள் கண்கொட்டாமல் அவற்றைப் பாத்துக் களிக்கிறோம், கைதட்டி ஜெயகோஷம் போடுகிறோம் என்றெல்லாம் முதலமைச்சர் கோபம் கொப்பளிக்க கதைத்திருக்கிறார்.



allvoices

இலங்கை ராணுவ ஹெலிகாப்டர்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் ? - ஜனக நாணயக்கார

புதுக்குடியிருப்பு மோதல்களில் காயமடைந்தவர்களை அழைத்துச்செல்ல வந்த இரு ஹெலிகாப்டர்கள் மீது விடுதலை புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாகத் இலங்கை தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது, காயமடைந்த வீரர்களை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டரை பாதுகாப்பான இடத்திற்கு விமானி கொண்டு சென்றதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.


allvoices

கச்சத் தீவை தாரை வார்த்தது கருணாநிதி தான் - ஜெ காட்டம்

கச்சதீவு குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கச்சத்தீவை இலங்கை அரசு புனிதப்பகுதியாக அறிவிக்கப்போவது குறித்து நான் விடுத்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் ஓர் அறிக்கையை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் கச்சத்தீவு குறித்து தான் தீர்மானத்தை முன்மொழிந்ததாக கூறியிருக்கிறார். ஆனால் 26.6.1974 அன்றே கச்சத்தீவு அப்போதைய மத்திய அரசால் இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது.



allvoices

எனக்கு 21, உனக்கு 16 - திமுக தொகுதி பங்கீடு

லோக்சபா தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும்,அ.தி. மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகிறது. பாரதீய ஜனதா கட்சி தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. தே.மு. தி.க.வும் தனித்து போட்டியிட இருப்பதால் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பட்டியலை தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

அதில், தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு பற்றிய விவரம் 2 நாளில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் முதல்- அமைச்சர் கருணாநிதி தெரிவித்து இருந்தார்.


allvoices

ஜெயலலிதா , ராமதாஸ் சந்திப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை டாக்டர் ராமதாஸ் நாளை சந்தித்து பேசுகிறார். அப்போது அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி இறுதி வடிவம் பெறுகிறது.

தமிழ்நாட்டில் பாராளு மன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட் டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க. அ.தி.மு.க. கூட் டணிக்கு செல்கிறது.

சென்னையை அடுத் துள்ள வானகரத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு பா.ம.க. பொதுக்குழு கூடுகிறது.

இதற்காக வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



allvoices

Monday, March 23, 2009

பா.ம.க., இல்லை - கருணாநிதி அறிவிப்பு

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

முதல்-அமைச்சர் கருணாநிதியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள்.

அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்-அமைச்சர் கருணாநிதி, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்தியயூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்று இருப்பதாக அறிவித்தார்.



allvoices

Sunday, March 22, 2009

வன்னியில் 13 கி.மீ.க்குள் 1.50 லட்சம் தமிழ் மக்கள்; வாரந்தோறும் 300 பேர் படுகொலை - 'தி டைம்ஸ்'

வன்னி நிலப்பரப்பில் 13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 150,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்; வாரம்தோறும் 300 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர்; மருந்து, உணவு, குடிநீர் இல்லாமல் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'தி டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் இருந்து வெளிவரும் 'தி டைம்ஸ்' இதழுக்காக எழுதிய கட்டுரையில் பத்திரிக்கையாளர் மாரீ கொல்வின் மேலும் தெரிவித்துள்ளதாவது:



allvoices

Saturday, March 21, 2009

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல், ரா காரணம் ? - பாகிஸ்தான் சந்தேகம்

இஸ்லாமாபாத்,மார்ச்.21 பாகிஸ்தான் லாகூரில் சிங்கள கிரிக்கெட் அணி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான சிங்கள அணியினரில் பலர் காயமடைந்தனர். கிரிக்கெட் வீரர்களின் மீதான இந்த தாக்குதல் உலகையே அதிர வைத்தது.

பாகிஸ்தான் இது குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் யாரும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. ஆரம்ப நிலை விசாரனையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது உறுதியானது.

அப்படி என்றால் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று ஆரம்ப கட்ட விசாரணையில், இந்த தாக்குதல் திட்டம் பாகிஸ்தானில் தீட்டபடவில்லை என்பது உறுதியானது. பாகிஸ்தானில் சிங்கள கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய உடன் அந்த நாட்டு பாதுகாப்பு உள்த்துறை செயலர் இந்த தாக்குதலில் வெளிநாட்டு சக்தி இனைந்திருக்கிறது என்று கூறினார் . ஆரம்பத்தில் இந்த செயலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் பத்திரிக்கையான "த டான்" இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாதிகளின் கைவரிசை இல்லை என்று நம்பத் தகுந்த ஆதாரங்களுடம் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருப்பதாவது :-



allvoices

விடுதலைப் புலிகள் மீண்டும் விமானத் தாக்குதல் நடத்த திட்டம் - இலங்கை போலீஸ் எச்சரிக்கை

விடுதலைப் புலிகள், பகல் வேளையில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அல்லது வர்த்தக மத்திய நிலையம் ஆகிய்வற்றை இலக்கு வைத்து மீண்டும் விமானத் தாக்குதலை நடத்தக் கூடுமென இலங்கை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திடீர் தாக்குதலொன்றை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.



allvoices

Friday, March 20, 2009

ஏப்ரல் 14 க்குள் புலிகளை அழியுங்கள் – இலங்கைக்கு இந்தியா உத்தரவு?

விடுதலைப் புலிகளை வரும் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் முழுவதுமாக அழித்து விடுமாறு இந்திய காங்கிரஸ் கட்சி இலங்கை அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அந்த செய்தியில் தெரிவித்திருப்பதாவது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவை இலங்கை அரசுக்கு காங்கிரஸ் கட்சி பிறப்பித்திருப்பதாக, காங்கிரஸ் கட்சியின் நம்பகமான உள் வட்டாரங்கள் மூலம் தமிழ்நாட்டில் தகவல் கசிந்துள்ளது.



allvoices

இரட்டை வேடம் போடும் மத்திய, மாநில அரசுகளை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள் - வைகோ

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் ஆகியோரை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோவையில் தமிழ்நாடு ஹோட்டல் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய வைகோ பேசினார், அப்பொழுது



allvoices

புலிகளிடம் புது வகை ஆயுதம், திண்டாடும் இராணுவம்

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் புதிய வகை ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்துவதாக, இலங்கை இராணுவத் தரப்பு கூறுகின்றது.

போர் நடவடிக்கையில் ஈடுபட்டு்ள்ள 11ஆம் பிரிவு காலாட் படை இதனால் கடும் இழப்புக்கள சந்தித்துள்ளதாகவும், இவ் ஆயுதங்கள் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதால், அவை அனைத்தும் விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்டவையாக அல்லது நவீனப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


allvoices

Wednesday, March 18, 2009

சென்னை ஐகோர்ட்டுக்கு, 14 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை. மார்ச் 18- சென்னை ஐகோர்ட்டுக்கு 14 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று பிறப்பித்தார்.

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை 60 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. இதையடுத்து, நீதிபதிகளின் எண்ணிக்கை 49லிருந்து 60 ஆக அதிகரிக்கப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது, 44 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் 7 நீதிபதிகள் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டதால் நீதிபதிகள் எண்ணிக்கை மேலும் குறைந்தது.



allvoices

மார்ச்.23 ல் சட்டக் கல்லூரி திறப்பு!

சென்னை, மார்ச் 18- சென்னை அரசு சட்டக் கல்லூரி வரும் 23-ம் தேதி திறக்கப்படுகிறது.

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் மாணவர்களுக்கு இடையே மோதல் நடந்தது. இதையடுத்து சட்டக் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டு 19-ம் தேதி கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது.

வகுப்புகள் 9 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் சட்டக் கல்லூரி உள்பட அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும், தொழிற்கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டன.



allvoices

தமிழக கால்நடை துறை செயலாளர் மாற்றம்

சென்னை, மார்ச் 18- தமிழக அரசின் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளர் லீனா நாயர்.

நேற்று இவர் இத் துறையில் இருந்து மாற்றப்பட்டு கடல்சார் வாரிய தலைமை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இந்தப் பொறுப்பில் இருந்துவந்த சி. முத்துக்குமாரசுவாமி , கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளராக பொறுப்பேற்கிறார்.



allvoices

எல்லா பெண்களையும் லட்சாதிபதி ஆக்குவோம் - அத்வானி

புதுடெல்லி, மார்ச் 18- பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் நாட்டில் எல்லா பெண்களையும் லட்சாதிபதி ஆக்கும் வகையில் அவர்களது பெயரில் பணம் டெபாசிட் செய்யப்படும் என்று பா.ஜ. தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது வெப்சைட்டில் அத்வானி எழுதியுள்ளதாவது:



allvoices

ஐபிஎல் புதிய அட்டவணை வெளியீடு

புதுடெல்லி, மார்ச் 18- மக்களவை தேர்தலை ஒட்டி ஐபிஎல் 20-20 அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்லி, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் போட்டி நடைபெறாது என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் சென்னையில் நடைபெறும் ஆட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கப்பட்ட ஐபிஎல் அமைப்பு கடந்த ஆண்டு 20-20 போட்டியை நடத்தியது. இதில் விளையாட உலகின் முன்னணி வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு இந்த தொடர் பெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் 20-20 தொடர் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி மே 26 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.



allvoices

3 வது அணி ஆட்சி அமைப்பது கடினம் - ஜோதிபாசு ஆருடம்

கொல்கத்தா, மார்ச் 18- மத்தியில் பா.ஜ. மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக 3-வது அணி ஆட்சி அமைப்பது மிக கடினம் என மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான ஜோதிபாசு தெரிவித்துள்ளார்.

மத்தியில் 4 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இடதுசாரிகள் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த பிரச்னை காரணமாக ஆதரவை விலக்கிக் கொண்டனர். அதன் பிறகு 3-வது அணி அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். ஆரம்பத்தில் சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 3-வது அணி உருவானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழாமல் இருக்க சமாஜ்வாடி உதவி நாடப்பட்டது. இதை தொடர்ந்து 3-வது அணி கலைந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து மாயாவதி விலகுவதாக அறிவித்தார். அவரது தலைமையில் மீண்டும் 3-வது அணி அமைந்தது. இதன் பின் தன்னிச்சையாக உ.பி. தொகுதிகள் அனைத்துக்கும் மாயாவதி வேட்பாளர்களை அறிவித்தார். இதனால் மீண்டும் 3-வது அணி பேச்சு முடங்கியது.

மேலும் படிக்க...


allvoices

3 வது அணி ஆட்சி அமைப்பது கடினம் - ஜோதிபாசு ஆருடம்

கொல்கத்தா, மார்ச் 18- மத்தியில் பா.ஜ. மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக 3-வது அணி ஆட்சி அமைப்பது மிக கடினம் என மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான ஜோதிபாசு தெரிவித்துள்ளார்.

மத்தியில் 4 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இடதுசாரிகள் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த பிரச்னை காரணமாக ஆதரவை விலக்கிக் கொண்டனர். அதன் பிறகு 3-வது அணி அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். ஆரம்பத்தில் சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 3-வது அணி உருவானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழாமல் இருக்க சமாஜ்வாடி உதவி நாடப்பட்டது. இதை தொடர்ந்து 3-வது அணி கலைந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து மாயாவதி விலகுவதாக அறிவித்தார். அவரது தலைமையில் மீண்டும் 3-வது அணி அமைந்தது. இதன் பின் தன்னிச்சையாக உ.பி. தொகுதிகள் அனைத்துக்கும் மாயாவதி வேட்பாளர்களை அறிவித்தார். இதனால் மீண்டும் 3-வது அணி பேச்சு முடங்கியது.

மேலும் படிக்க...


allvoices

இலங்கை பிரச்சனையில், காங். அரசு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி உள்ளது - இல. கணேசன்

தமிழக பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை சுகாதார மந்திரி அந்த நாட்டில் நடைபெறும் போருக்கு இந்திய அரசு உறுதுணையாக இருந்தது என்று கூறி இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய காங்கிரஸ் அரசு பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட கதையாக உள்ளது. இதை பா.ஜனதா மக்கள் முன்பு அம்பலப்படுத்தும்.



allvoices

Monday, March 16, 2009

திருப்பதி லட்டுக்கு காப்புரிமை !

திருப்பதி, மார்ச் 16- திருப்பதி லட்டுக்கு காப்புரிமை கோரி திருமலை தேவஸ்தானம் விண்ணப்பித்துள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை சென்னையில் உள்ள புவியியல் அடையாள பதிவு அலுவலகத்தில் தேவஸ்தானம் அளித்துள்ளது. அதன்படி காப்புரிமை அளிக்கப்பட்டால், பொருட்களின் புவியியல் அடையாள பதிவுச் சட்டம் 1999ன் கீழ் அறிவுசார் சொத்துரிமையும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கிடைக்கும்.



allvoices

கர்நாடகாவில் புலிக்கு ஆதரவு

மைசூர், மார்ச் 16- கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலியை தத்தெடுத்துள்ளார்.

இது குறித்து உயிரியல் பூங்கா இயக்குநர் விஜயரஞ்சன் சிங், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தப் பூங்காவில் 1190 விலங்குகளும், 153 அரியவகை தாவரங்களும் உள்ளன. இங்கு விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 753 விலங்குகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன.



allvoices

இந்தியாவுக்கு 70ஆயிரம் கோடி கடன் - உலக வங்கி வழங்குகிறது

மும்பை, மார்ச் 16- அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ரூ.70,000 கோடி கடன் அளிக்க திட்டமிட்டுள்ள உலக வங்கி, அதில் முதலாவதாக ரூ.13,000 கோடியை விரைவில் அளிக்கிறது. இந்திய கட்டமைப்பு, நிதி மற்றும் வங்கித் துறைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.70,000 கோடி கடனுதவி அளிக்க உலக வங்கி திட்டமிட்டு உள்ளது.


allvoices

2020 ல் நிலவில் இந்தியனின் காலடி- சந்திரயான் விஞ்ஞானி அண்ணாதுரை உறுதி

ஈரோடு, மார்ச் 16- 2020-ம் ஆண்டில் நிலவில் இந்தியனின் காலடி பதியும் என சந்திரயான் திட்ட இயக்குநரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செய்தியாளர்களிடம் அண்ணாதுரை கூறியதாவது:

சந்திராயன்-1 வெற்றி கரமாக ஏவப்பட்டதையடுத்து இஸ்ரோவில் சந்திராயன்-2 திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சந்திராயன்- 2ஐ விண்வெளியில் இறக்கி ஒரு மீட்டர் ஆழத்துக்கு மண்ணை தோண்டி எடுத்து அதை ஆய்வு மேற்கொள்வதே இலக்கு. 2020-ம் ஆண்டில் இந்தியா சார்பில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் உள்ளது. அதற்கு முன்னதாக நிலவுக்கு விண் கலனை அனுப்பி சோதனைகள் நடத்துவதே, சந்திராயன்-2ன் நோக்கம்.



allvoices

Sunday, March 15, 2009

தமிழ்மணம் திருச்செங்கோடு தமிழ் இணைய பயிலரங்கு.

திருச்செங்கோடு,மார்ச்.14- திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்மணம் இணையதளம் இணைந்து தமிழ் இணைய பயிலரங்கினை நடத்தின.
இந்த பயிலரங்கில் கல்லூரி மாணவ,மாணவியருடன் தமிழகத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் இணைய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.


திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்மணம்.நெட் இணைய தளமும் இணைந்து தமிழ் இணையதளங்களும், வலைப்பூக்களும் எனும் தலைப்பில் இணைய பயிலரங்கினை நடத்தின. இந்த பயிலரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளர் மா.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் இரா. சந்திரசேகரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் முனைவர் கண்ணன் தனது தலைமை உரையில் மாணவர்கள் இணையதளங்களை நன்முறையில் நல்ல விசயங்களுக்கு பயன்படுத்த வேண்டும், இணையம் இன்று நல் அறிவு பகிர்விற்கு பயன்பட்டு வருகிறது, இணைய தளங்களில் பல்வேறு நூல்கள் இருந்தாலும் அவை நேரில் ஒரு நூலினை படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். நல்ல செய்திகளை நல்ல முறையில் பரப்ப வேண்டும் என பேசினார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வலைப்பூக்களை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் தமிழ் ஆராய்ச்சியாளரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், கொங்கு ஆய்வு மையம் பேராசிரியர் புலவர் செ.இராசு அவர்கள் சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகளாக சிறந்து விளங்கியதையும், கலை, பண்பாடு, மரபு, பாரம்பரியம் ஆகியவை இதற்கு வித்தாக அமைந்தது எனவும் பேசினார் ( இவரின் முழுமையான உரையினை வீடியோவில் காண்க).



allvoices

தமிழக வாக்காளர் பட்டியலில் 35 லட்சம் பேர் நீக்கம்

சென்னை, மார்ச் 15- ‘‘தமிழகத்தில் வீடு வீடாக சென்று முழு ஆய்வு நடத்தப்பட்டதில், வாக்காளர் பட்டியலில் இருந்து 35 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் நரேஷ்குப்தா நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் தேர்தல் விதிமீறல் இல்லாதவாறு பணிகள் நடக்க கூடுதல் தேர்தல் அதிகாரியாக சத்தியகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 18ம் தேதி பொறுப்பு ஏற்பார். தேர்தல் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளில், 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களை மாற்ற கூறியுள்ளோம். மூன்று நாட்களில் அவர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூடுதல் டிஜிபி உறுதி அளித்துள்ளார்.
மதுரையில் சில அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் வேறு அதிகாரிகள் விரைவில் பணியில் சேர்வார்கள். என நரேஷ்குப்தா தெரிவித்தார்.



allvoices

ராசியில்லாதா "ஜெய் ஹோ"

ஆஸ்கார் விருது பெற்ற "ஜெய் ஹோ" பாடலை தனது தேர்தல் பிரச்சார பாடலாக எடுத்து மக்களிடம் கிளம்பி உள்ளது காங்கிரஸ் கட்சி

இதுவரை இரண்டு வார்த்தை ஸ்லோகங்கள் வேற்றி பெற்றதாக சரித்திரமில்லை என்று காங்கிரஸ் கட்சிக்கு தெரியவில்லை போலும். இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவர்ஹலால் நேரு மறைந்த பிறகு ஆட்சிபதவிக்கு வந்த இந்திரா காந்தி கரீப் அட்டாவ்(ஏழ்மையை விலக்குவோம்) என்ற வார்த்தையை கொண்டு வந்து தேர்தலில் நின்றார். கடுமையான தோல்வியை சந்தித்தார். இதனை அடுத்து மொராஜ் தேசாய் இந்த வார்த்தையின் பாதிப்பை கண்டு கொண்டு நிதானமாகா ஜெய் ஜவான், ஜெய் கிஷான் என்ற இரட்டை வார்த்தையை ஸ்லோகமாக கொண்டு வந்தார். இந்த ஸ்லொகத்தின் தாக்கம் அப்போது இந்தியா முழுவதும் காங்கிரஸிற்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.



allvoices

Wednesday, March 11, 2009

தேர்தல் பிரச்சாரத்தில் இலங்கை பிரச்சனைக்குத் தடை - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. தற்பொழுது இலங்கை பிரச்சனை இந்திய அரசியலில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு போக்கினை ஒடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்திய அரசியலில் இலங்கை பிரச்சினை பெருமளவில் பேசப்பட்டு வரப்படுகின்றது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடத்தில் ஈழ மக்களின் நிலையை எடுத்துச்சொல்லும் வகையில் சில அரசியல்கட்சிகளும் , அரசியல் சாரா அமைப்புகளும் துண்டறிக்கைகளையும் , சுவரொட்டிகளையிம் , வைத்து மக்களிடத்தில் தமிழுணர்வை ஊட்டிவருகின்றனர்.



allvoices

Tuesday, March 10, 2009

இலங்கை பிரச்சனை, அமெரிக்காவின் துணையை இந்தியா நாடக் கூடாது : டாக்டர் ராமதாஸ்

இலங்கையில் ஆயுத மோதலுக்கு தீர்வு காணாமல் போர் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க போகிறோம் என்று படையை அனுப்பி வைத்தால் தோல்விதான் ஏற்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை போர் பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டால், அவர்களது உரிமைகளுக்காக போராட்டக் களத்தில் நிற்கும் போராளிகளை அழிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று இலங்கை அரசு கருதுகிறது.


allvoices

முல்லைத்தீவு, ராணுவ பீரங்கித் தளம் விடுதலைப் புலிகளால் அழிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் இலங்கை ராணுவத்தின் பீரங்கி தளத்தை விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கர்ணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.

இது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாவது:

விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் அண்மையில் அமைத்திருந்த பீரங்கித் தளத்தை திங்கட்கிழமை இரவு விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கர்ணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.



allvoices

ஐகோர்ட் மோதல் சம்பவ வழக்கு, விசாரிக்க நீதிபதிகள் குழு - தலைமை நீதிபதி நியமித்தார்

சென்னை, மார்ச் 10- ஐகோர்ட் வக்கீல்கள் மற்றும் போலீசார் மோதல் வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்காக முகோபாத்யா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சை தலைமை நீதிபதி கோகலே இன்று நியமித்தார்.

சென்னை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 19-ம் தேதி வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. மோதல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மோதல் மற்றும் வக்கீல்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு கமிஷனை நியமித்தது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா சென்னை வந்து இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். மோதல் சம்பவம் நடந்த ஐகோர்ட் வளாகத்தையும் பார்வையிட்டார். விசாரணை குறித்த அறிக்கையை கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் தாக்கல் செய்தார். அதில், மோதலுக்கு இரு தரப்பினரும் காரணம் என்றும், தற்காலிக தலைமை நீதிபதியின் மெத்தனமும் இதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் கூறியிருந்தார்.



allvoices

வன்னியில் தொடரும் அவலம் ! இலங்கை ராணுவத் தாக்குதல்: இன்றும் 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை;

வன்னி பகுதியில் இன்று இலங்கை ராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை இலங்கை ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.



allvoices

ஹோலி வண்ணங்களின் டோலி !

உலகில் உள்ள முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் ஆரம்பம் எப்படியோ ஆனால் மக்களின் மனதில் உள்ள இறுக்கங்களை போக்கி கொள்ளவும், வாழ்க்கையின் சுவையை அன்று ஒரு நாளாவது அனைவருடன் சேர்ந்து கொண்டாடி மகிழவும், தங்களுக்குள் உள்ள இருக்கங்களை போக்கி, சிற் சில சிறிய பெரிய காரணங்களால் மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அந்த வருத்தங்கள் நீங்கி, புதுப்பிக்கும் திருநாளாக விழாக்களை பயன்படுத்தி கொள்ள விழாக்களை நமது மூதாதையார்கள் உருவாக்கினர்.

இந்த விழாக்கள் அனைத்தும் தோன்ற காரணம் இதற்காத்தான் மற்ற கதை, கற்பனை, புராணங்கள் எல்லாம் பிறகுதான். இதற்கு நல்ல உதாரனம் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர். மதுரை நகரம் முழுவதும் இணைந்து ஒரு விழாவை கொண்டாட வேண்டும். அந்த விழாவில் ஏழை முதல் பணக்காரர் வரை இணைந்து தங்களில் மன இறுக்கங்களை போக்கி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதன் விளைவாக அமைச்சர்களிடமும் மற்றும் சமய பெரியவர்களிடமும் ஆலோசித்து தான் மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் மதுரையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் உள்ள அழகர் பெருமானை மதுரைக்கு கொண்டு வரும் சித்திரைத்திருவிழா தொடங்கியது. இதில் திருமலை நாயக்கரின் பார்மூலா வெற்றிபெற்றது.

ஆம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களின் மக்கள் அனைவரும் சித்திரை திருவிழா என்றால் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

இன்றைய ஏழை பணக்கார பேதம் மிகுந்த சமயத்தில் தீபாவளி போன்ற பண்டிகைகளில் பணக்காரர்கள் பகட்டு உடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவதும், ஏழை குழந்தைகள் அவர்களை பரிதாப கண்களுடன் பார்ப்பதும் இது ஒரு கொண்டாட்டமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு போய்விட்டது.

பல ஏழை குடும்பங்களில் இது போன்ற விழாக்களில் தங்களின் குழந்தைகளை மகிழ்விக்க அவர்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பது ஏழை குடும்பத்தில் இருந்து வந்த பலருக்கு தெரியும். இதனால் தான் தமிழர்கள் இது போன்ற பகட்டான விழாக்களை தவிர்த்து உழைப்பிற்கு உறுதி சேர்க்கும் பொங்கல் திருவிழா, கோடையில் சித்திரை திருவிழா, புதுவருடம், மற்றும் வசந்த விழா என பல கொண்டாடி வந்தனர்.



allvoices

Monday, March 9, 2009

இலங்கை தமிழர்களுக்கு ' தனி நாடு' , பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ரூ.1 கோடி - ஜெயலலிதா

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற 'தமிழர் நாடு' வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று உண்ணாவிரத மேடையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜெயலலிதா பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதத்தை நடத்துகிறோம். கடந்த ஆண்டு இந்திய அரசு இராணுவ உதவி செய்வதாகவும், ஆயுதங்கள் வழங்கி வருவதாகவும் செய்திகள் வந்தன. இதை மத்திய அரசு மறுக்கவில்லை. இந்திய பாதுகாப்புதுறை உயர் அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளும் இலங்கை சென்றதாகவும் கூறப்பட்டது. அதையும் மத்திய அரசு மறுக்கவில்லை, திமுகவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.



allvoices

பீகார் சர்ச்சில் குண்டுவீச்சு - பாதிரியார் உட்பட 5 பேர் படுகாயம்

ரோதாஸ், மார்ச் 9- பீகார் மாநிலத்தில் தேவாலயம் மீது குண்டுவீசப்பட்டது. தப்பியோட முயன்ற பாதிரியார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பாதிரியார் உள்பட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது
.
பீகார் மாநிலம் ரோதாஸ் மாவட்டம் நசாரிகன்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படாதியா கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இது 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு நேற்று மாலை வினோத்குமார் ஜேம்ஸ் என்ற பாதிரியார் 70க்கும் மேற்பட்ட கிராமமக்களுடன் ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் ஜன்னல் வழியாக நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசினார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.



allvoices

புதுக்குடியிருப்பு, புலிகள் தாக்குதலில் 100 ராணுவத்தினர் பலி

புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட பெரிய அளவிலான முற்றுகை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த சண்டையின் பொழுது இலங்கை ராணுவத்திற்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக படையினரின் உடல்களும், ஆயுதங்களும் சண்டை நடைபெற்ற பகுதி முழுவதும் சிதறிக் கிடப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் , சாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் உடல்களை பெருமளவில் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.



allvoices

Friday, March 6, 2009

முல்லைத் தீவு, விடுதலைப் புலிகள் ஊடறுப்பு தாக்குதல்: கொழும்பு ஊடகம் தகவல்

சிறிலங்கா இராணுவத்தின் 55 ஆவது படைப் பிரிவின் பின்தளப் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் ஊடறுத்து தாக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:



allvoices

Thursday, March 5, 2009

அதிமுக கூட்டணியில் பாமக ?

லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய பாமக முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் இந்திய அளவில் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் கட்சிகள் முழுவீச்சில் இறங்கியதுடன் சில கட்சிகள் கூட்டணி வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது அணிகளை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டன. ஆனால் பாமக, தேமுதிக, பாஜக ஆகியவற்றின் நிலைதான் கேள்விக்குறியாக உள்ளது.




allvoices

இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி மும்பையில் மனித சங்கிலி

இலங்கையில் தமிழினத்தை சிங்கள ராணுவமும் அந்த நாட்டின் தலைவரான ராஜபக்சே, அவரது சகோதரர் கோத்தபாயா ராஜபக்சே, ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் உயிரை குத்தகைக்கு எடுத்து குழந்தை முதியோர் என்று பார்க்காமல் தினம் தினம் கொன்று குவிக்கின்றனர். விடுதலைபுலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் உலகை குருடாக்கிவிட்டு தமிழ் பெண்களை வயது வித்தியாசம் இன்றி கற்பழித்தகின்றனர். தமிழ் இளைஞர்களை சொல்லன்னா விதம் சித்தரவதை செய்து கொள்கின்றனர். சிங்கள ராணுவமும் சிங்கள அரசும் உலகின் பார்வைக்கு தமிழர்கள் மீதான இந்த கொடுமைகளை மறைக்க ஈழப்பகுதிகளில்....



allvoices

நீலி(ஜெயலலிதா) யின் ஆசை நீர் மேல் குமிழி போல் ஆகும்- கருணாநிதி

நீலியின் (ஜெயலலிதா) ஆசை நீர் மேல் குமிழி போல் ஆகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"உயர் நீதிமன்ற வன்முறைக் கலகத்திற்கு முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்றிட வேண்டும்''. இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழுவில் தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சிபிஎம் சொல்லுமேயானால்- நீதிமன்றத்தில் வீசப்பட்ட அந்த முட்டைகளும்- அவற்றை வீசிய ஒரு சில வழக்கறிஞர்களும்- தங்களுக்குள்ள "பொறுப்பை'' யாரோ தட்டிப் பறிக்கிறார்களோ என்று கோபிக்கக் கூடுமல்லவா?

அது மட்டுமல்ல; மார்க்சிஸ்ட் கட்சி நண்பர்களுக்கு பணிவன்புடன் ஒரு வினா எழுப்புகிறேன்-


allvoices

இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் - ஜெ அறிவிப்பு

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தமிழக அரசைக் கண்டித்தும் வருகிற 10ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெறப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

திமுக மற்றும் பாமக தலைமையிலான பல்வேறு கட்சிகள் தனித் தனியாக அமைப்புகளைத் தொடங்கி பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளன.

ஆனால் அதிமுக பெரிய அளவில் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக போராட்டம் எதையும் நடத்தாமல் அமைதியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் திடீரென அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:



allvoices

Wednesday, March 4, 2009

மலேசியா, போலீஸ் சித்ரவதை தமிழர் கொலை

மலேசியாவில் கார் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவரை போலீசார் சித்ரவதை செய்து கொலை செய்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவை சேர்ந்த தமிழர் குகன் ஆனந்தன் (22). கார் திருட்டு வழக்கு தொடர்பாக இவரை மலேசிய போலீசார் கடந்த ஜனவரி 14-ம் தேதி கைது செய்தனர். கஸ்டடியில் வைத்து விசாரித்தனர். மர்மமான முறையில் குகன் ஜனவரி 20-ம் தேதி இறந்தார். நுரையீரலில் சளி அடைத்து இறந்ததாக போலீசார் கூறினர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவ்வாறே கூறப்பட்டது.



allvoices

வன்னியில் பட்டினிக்கொடுமை: காட்டுக் கொடி இலைகளை தின்ற 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

வன்னியில் சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் பலியாகும் அப்பாவித்தமிழர்கள் ஒருபுறமிருக்க, பட்டினி கொடுமையால் பலியாகும் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

சிங்கள அரசின் போர் நடவடிக்கைகளால் வன்னயில் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கப்பட்டுள்ள மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் பட்டினி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்து 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.



allvoices

அரசியலில் இருந்து கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு தேவை ! - ஜெயலலிதா

முழு நேர அரசியலில் இருந்து கருணாநிதி நிரந்தர ஓய்வு எடுத்துக் கொள்வதுதான் அவருக்கும் நல்லது, தமிழக மக்களுக்கும் நல்லது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு:

கடந்த 19ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையே வன்முறையில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயலாகும்.

இதே போன்று திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் தான் ஜாலியன்வாலா பாக் படுகொலை. ஆனால், கருணாநிதியால் குறிப்பிடப்படும் மகாமகம் சம்பவம் தற்செயலாக நடைபெற்ற ஒரு விபத்து.

உச்ச நீதிமன்றம் கருணாநிதியை பதில் அளிக்கச் சொல்லவில்லை, காவல் துறையைத்தான் பதில் அளிக்கச் சொன்னது என்று தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.


allvoices

இலங்கை, தமிழர்களை மீட்க அமெரிக்கப் படை?

இலங்கையில் சண்டை நடந்து வரும் பகுதியில் சிக்கித் தவிக்கும் 2 லட்சம் அப்பாவித் தமிழர்களை விடுவிக்க அமெரிக்க படைகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த இலங்கை தொண்டு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
.
இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டை பகுதியில் சுமார் 2 லட்சம் அப்பாவித் தமிழர்கள் உள்ளனர்.

இவர்களை அப்பகுதியிலிருந்து மீட்க அமெரிக்க பசிபிக் கமாண்ட் என்னும் படைகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இலங்கை மக்களுக்கான சமத்துவம் மற்றும் நிவாரணம் என்ற பெயரில் இயங்கி வரும் பியர்ல் எனும்தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.



allvoices

Tuesday, March 3, 2009

சென்னை, இலங்கைத் தூதரகத்திற்கு பூட்டு போடும் போராட்டம்

இலங்கையில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை ராணுவத்திற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணை தூதரகத்தைப் பூட்டு போட்டு மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் உள்ள இலங்கைத் துணை தூதரகத்தைப் பூட்டுப் போட்டு மூடும் போராட்டத்தை நடத்தப்போவதாகத் தமிழீழ விடுதலை ஆதரவு கூட்டம் அறிவித்திருந்தது.



allvoices

அமலுக்கு வந்தது தேர்தல் விதிமுறைகள், வேட்பாளர் செலவை கண்காணிக்க குழு

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பயன்படுத்தும் அரசு வாகனங்களை திரும்ப ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் செலவை கண்காணிக்க, வருமான வரித்துறை சார்பிலும் தனிக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

மக்களவைக்கு ஏப்ரல் 16-ல் துவங்கி மே 13 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மே 13-ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று மாலை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.



allvoices

கேரளாவில் இருந்து இலங்கைக்கு பல லட்சம் ரூபாய் மருந்து கடத்தல் ?

கேரளாவில் இருந்து இலங்கைக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் கடத்தப்பட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், கேரள கடல் வழியாக விடுதலைப்புலிகளுக்கு டீசல், பெட்ரோல் மற்றும் மருந்துகள் கடத்தப்படுவதாக மாநில உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரள கடற்கரை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். ஆலப்புழையில் இருந்து பெருமளவில் மருந்துகள் இலங்கைக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.



allvoices

மாற்றங்கள் இல்லாத மாற்றங்கள்- பேராசிரியை க.மாரித்தாய்

பாரத தேசம் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆன பின்னும் கல்வி வளர்ச்சியில் தேக்க நிலையே நீடித்து வருகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டு மக்களின் அறியாமை வீழ்ச்சிக்கும் கல்வித்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் இன்றளவும் ஏராளமாக உள்ளன. நமது நாடு சுதந்திரம் பெற்ற பொழுது ஆங்கிலேயர்களை மட்டுமே நாட்டை விட்டு விரட்ட முடிந்ததே தவிர அவர்களின் கலாச்சாரத்தையோ கல்வித் துறையின் தேக்கங்களையோ நம்மால் விரட்டி அடிக்க முடியவில்லை.

ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு வெளியேறும் முன் நாட்டைத் துண்டாடி பழி தீர்த்துக் கொண்டனர். பாரத மாதாவின் ஒட்டிப் பிறந்த கவசம் போல் இருந்த இந்து-இஸ்லாமிய ஒற்றுமையை உடைத்து அதன் மூலம் ஒன்றுபட்ட பாரதத்தை சிதைத்து பாகிஸ்தான் பிரிவினைக்கு வழி கோலினர்.

தலைக்கு வந்த பிரச்சினை தலைப் பாகையுடன் போனது… என பாகிஸ்தான் பிரிவினையை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டோம் நாம். பிரிவினையில் ‘சுண்டு விரல்' (பாகிஸ்தான்); தானே போனது… என நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்… ஆனால் நமக்கே தெரியாமல் நம் நாட்டு மக்களை நிரந்தரமாக ‘ஆட்டுமந்தை' போல் அறியாமை இருளில் சிக்க வைக்கும் ‘மெல்லக் கொல்லும் விஷம்' போன்ற ‘மெக்காலே கல்வித் திட்டம்' எனும் உயிர் கொல்லிக் கிருமியை நம் தேசத்தின் தேகத்தில் ஊசியை ஏற்றி விட்டது ஆங்கிலேய அரசு.



allvoices

Monday, March 2, 2009

ஈழப்பிரச்சனையை பாரதீய ஜனதா வினால் மட்டுமே தீர்க்க முடியும் - எச்.ராஜா

இலங்கை இனப் பிரச்சனையை தீர்க்க எங்களால் மட்டுமே முடியும் என்று பா.ஜ.கவின் தமிழ் மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பேட்டையில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எச்.ராஜா, இலங்கை இனப்பிரச்சனையை தீர்க்க பா.ஜ.கவால் மட்டுமே முடியும்.




allvoices

வன்னியில் விமானங்கள் மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா போட வேண்டும்: ராமதாஸ்

போர் நிறுத்தம் கிடையாது என்று அறிவித்திருக்கும் இலங்கை அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு 1987ஆம் ஆண்டு செய்ததைப் போன்று விமானம் மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா போட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

போர் நிறுத்தம் கிடையாது என்று அறிவித்திருக்கும் இலங்கை அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போர் முனையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடத்தில்தான் அவர்கள் வசிக்கிறார்கள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, கொடூரத் தாக்குதல் மூலம் தமிழர்களை வெளியேற்றத்துடிக்கும் இலங்கை அரசின் வலையில் இந்தியா சிக்கி விடக் கூடாது.


allvoices

புலிகள் சீருடையில் வைகோ - இலங்கை ராணுவம் தகவல்

பிரபாகரனுடன் சேர்ந்து விடுதலைப்புலிகளின் சீருடையில் வைகோ துப்பாக்கி சுடும் போட்டோவை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை ராணுவம் கைப்பற்றி சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஒரு கட்டிடத்தில் நடந்த சோதனையில் சில போட்டோக்களையும், வீடியோ பதிவுகளையும் ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். அதில் பிரபாகரனுடன் வைகோ உள்ளது போன்ற பல படங்களை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


allvoices

தமிழனத் துரோகி கருணாநிதி - வைகோ

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் அனைத்து துரோகத்துக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கூட்டுப்பங்காளியாக உள்ளார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இரண்டாம் உலகப் போரின் போது, யூத இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, படுகொலைகள் நடத்தியதுபோல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் கொலைகார அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ் இனத்தையே கருவறுக்க முனைந்து, இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக்கிறான். இந்த தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதலுக்கு முழுக்க, முழுக்க ஆயுத உதவி செய்தது இந்திய அரசுதான்.

1998 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள், டெல்லியில் தான் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழின கொலை நடத்தும் சிங்கள அரசுக்கு இந்தியா எவ்விதமான உதவியும் செய்யாது என்றும், ஆயுதங்களை கொடுக்காது என்றும், ஆயுதங்களை சிறிலங்காவுக்கு விற்பனை செய்வதில்லை என்றும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார்.



allvoices

Sunday, March 1, 2009

எனது உயிர் இனி தமிழர்களுக்கு சொந்தமானது- கருணாநிதி

அறுவைச் சிகிச்சை மூலம் வந்துள்ள இந்த உயிர் இனி தமிழர்களுக்குச் சொந்தமான உயிர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:

"சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒளிவிளக்கு''- என்ற வரலாற்றுப் புகழ் மிக்க பொன்மொழிக்குச் சொந்தக்காரர் அண்ணா, இன்றிருந்தால் இப்போது நடைபெறுகிற விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் குறித்து எவ்வளவு வேதனைப்படுவார் என்று எண்ணிப்பார்க்கிறேன்.

தந்தை பெரியார், தன்மான இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதற்கும், சுய மரியாதைக்கு மாறாக நடைபெறும் காரியங்களைச் சூழ்ந்து எதிர்ப்பதற்கும், எத்தனையோ போராட்டங்களை நடத்திய வையம் புகழ் வைக்கம் வீரர் ஆவார்.

வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து சட்ட மறுப்பு இயக்கம் நடத்திய- வெள்ளை உள்ளம் கொண்ட காந்தியடிகள்- சௌரி சௌரா போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கச்சொல்லி வெளியிட்ட அறிக்கை-அந்த அண்ணலின் அறவழியை உலகிற்கு ஒளிகாட்டி உணர்த்திக்கொண்டிருக்கின்ற அறிக்கையாகும்.



allvoices

துபாயில் மானுட‌ வ‌ச‌ந்த‌ம், டாக்ட‌ர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது பங்கேற்பு

துபாய் ஈமான் அமைப்பு சார்பாக மானுட வசந்தம் நிகழ்ச்சி இந்திய கன்சுலேட் அரங்கில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை வகித்தார்.

ஹாபிஸ் முஹம்மது இப்ராஹிம் இறைவசனங்களையும், அதன் தமிழ் மொழியாக்கத்தை ஈமான் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் வாசித்தனர்.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்கள் எம்.அப்துல் கத்தீம், ஏ. அஹமது முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.
லியாக்கத் அலி அனைவரையும் வரவேற்றார்.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் துவக்கவுரை நிகழ்த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்பாகிவ‌ரும் மானுட‌ வச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சி துபாயிலும் ஈமான் அமைப்பின் சார்பில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு ச‌கோத‌ர‌ ச‌முதாய‌ ம‌க்க‌ள் இஸ்லாம் குறித்த‌ த‌ங்க‌ள‌து ஐய‌ப்பாடுக‌ளுக்கு உரிய‌ விள‌க்க‌த்தை டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் மூல‌ம் பெற‌ வேண்டும் என‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. நாம் ப‌ல்வேறு ம‌த‌ங்க‌ளைச் சார்ந்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்தாலும் ம‌ன‌ங்க‌ளால் ஒத்த‌வ‌ர்க‌ள். ம‌னித‌நேய‌த்தை வ‌லியுறுத்தாத‌ ச‌முதாய‌ம் இல்லை. இத‌னைப் புரிந்து கொண்டு நாம் அனைவ‌ரும் ஒரு குடும்ப‌மாக‌ இணைந்து செய‌ல்ப‌ட‌ இந்நிக‌ழ்ச்சி பெரிதும் உத‌வும் என்ற‌ ந‌ன்னோக்கில் துபாய் ஈமான் அமைப்பு இம்மானுட‌ வ‌சந்த‌ம் நிக‌ழ்ச்சியினை வ‌ழ‌ங்குகிற‌து. என பேசினார்.



allvoices

இலங்கை ராணுவத்தில் விடுதலைப் புலிகளின் கமாண்டோ அணி ஊடுருவி தாக்குதல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறிய கமாண்டோ படை அணிகள் இலங்கை ராணுவத்தின் நிலைகளுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் 'லக்பிம' வார இதழ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 'லக்பிம' வார இதழின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகளின் 15 பேர் கொண்ட கமாண்டோ அணி, முதலாவது சிங்கள ரெஜிமென்ட் பட்டாலியன் முகாம் அமைத்திருந்த பகுதிக்குள் கடந்த வாரம் ஊடுருவிய போது கடுமையான சண்டை மூண்டது.


இத்தாக்குதலின் போது அதிகாரி ஒருவர் உட்பட 7 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.


allvoices

தனி ஈழம் மட்டுமே சரியான தீர்வு - நாஞ்சில் சம்பத்

இந்திய அரசை வழிநடத்தும் காங்கிரஸ்காரர்களின் ஒரே நோக்கம் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்பதுதான். தவிர இலங்கை தமிழர்களை பற்றி கவலைப்படவில்லை. பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும். அதில் சந்தேமே இல்லை. மதி.மு.க. கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் இனப்படுகொலையை கண்டித்து மதி.மு.க. சார்பில் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி தமிழ் ஈழத்தை தவிர வேறொன்றும் சரியான தீர்வாக இருக்க முடியாது. உலக நாடுகள் அனைத்தும் போரை நிறுத்துங்கள் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் இந்தியா மட்டும் நேரடியாக போரை வலியுறுத்துமாறு சொல்லவில்லை.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசவே மறுக்கிறார். போரை நிறுத்துமாறு மத்திய அரசை நிர்ப்பந்திக்க கருணாநிதியால் முடியவில்லை. ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அடிக்கடி புலம்புகிறார். நாங்களோ (ம.தி.மு.க.), அல்லது பா.ம.க., கம்யூனிஸ்டுகள் நினைத்தாலோ தி.மு.க. அரசை கவிழ்க்க முடியாது. காங்கிரஸ் நினைத்தால் மட்டும்தான் முடியும். அவர்கள் அப்படி நினைப்பதாக தெரியவில்லை.

இந்திய அரசை வழிநடத்தும் காங்கிரஸ்காரர்களின் ஒரே நோக்கம் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்பதுதான் தவிர இலங்கை தமிழர்களை பற்றி கவலைப்படவில்லை. பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும். அதில் சந்தேமே இல்லை.


allvoices
Related Posts with Thumbnails